அரசு குழந்தைகள் இல்ல நிர்வாக சீர்கேடு சட்டக்கல்லுாரி மாணவர்கள் குற்றச்சாட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
02:36

விழுப்புரம்: அரசு குழந்தைகள் இல்ல நிர்வாக சீர்கேடுகள் குறித்து, விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் சங்கரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரி பயிற்சிக்குழு மாணவர்கள் கொடுத்துள்ள மனு;விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரியில் படித்து வரும் மாணவர்களில் 30 பேருக்கு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.அதன்படி, கடந்த 18ம் தேதி அரசின் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் விழுப்புரம் அரசு குழந்தைகள் இல்லத்திற்கு சென்றோம். இங்கு 53 ஆண் மற்றும் 16 பெண் சிறுவர்கள் பராமரிக்கப்படுகின்றனர்.இங்கு, தற்போது 20க்கும் மேற்பட்ட வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சிறுவர்கள் உள்ளனர். அவர்கள் பல நாட்களாக இங்கு அடைக்கப்பட்டிருப்பதாகவும், தங்களது பெற்றோர்களை பற்றிய தகவல்களை இல்ல நிர்வாகத்திடம் கூறியும் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் தங்களை இங்கேயே வைத்துள்ளதாக சிறுவர்கள் கூறுகின்றனர்.இங்குள்ள 16 பெண் குழந்தைகளை எங்கள் குழுவினர் சந்திக்க அனுமதிக்கவில்லை. இதனால், அவர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும், இங்குள்ள கழிவறைகள் அனைத்தும் பழுதடைந்து தண்ணீர் வசதியின்றி துர்நாற்றத்துடன் காணப்படுகின்றது.கழிவறை மற்றும் குளியலறை கதவுகள் அனைத்தும் சேதமடைந்து உள்ளது. பல கழிவறை, குளியலறைகளில் கதவு என்பதே இல்லை. சிறுவர்கள் பயன்பாட்டிற்காக உள்ள நுாலகம், கணிப்பொறி அறை உள்ளிட்ட அனைத்து அறைகளும் எப்போதும் மூடப்பட்டுள்ளது.இல்ல பராமரிப்பிற்காக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 35 பேர் உள்ளனர். ஆனால், இல்ல பராமரிப்பு, உணவுத்தரம் மற்றும் சுகாதாரம் ஆகியவை பராமரிப்பின்றி உள்ளது.இதேபோன்று, இல்லத்தை கண்காணிக்கும் குழந்தைகள் நல கமிட்டி செயல்பாடுகள் சரியாக இல்லை. இல்ல பராமரிப்பிற்காக ஒதுக்கப்படும் நிதிகளில் பெருமளவு முறைகேடு செய்யப்பட்டு வருகின்றது.எனவே, விழுப்புரம் அரசு குழந்தைகள் இல்லத்தில் உள்ள நிர்வாக சீர்கேடுகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும, என மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X