| செஞ்சியில் தி.மு.க., இளைஞரணி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் Dinamalar
செஞ்சியில் தி.மு.க., இளைஞரணி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
02:36

செஞ்சி: செஞ்சியில் திமுக மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் செஞ்சியிலுள்ள வள்ளி அண்ணா மலை திருமண மண்டபத்தில் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த் தலைமையில் நடந்தது.மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் பிரபா, சம்பத், பிரசன்னா, பழனி முன்னிலை வகித்தனர். விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செந்தமிழ்ச்செல்வன், சேதுநாதன், மாவட்ட அவைத் தலைவர் நமச்சிவாயம், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், துரை, நகர செயலாளர் கபிலன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கதிரவன், மணிகண்டன், அண் ணாமலை, குமரன், சரத்குமார், ஜெயபிரகாஷ், வழக்கறிஞர் அன்புச்செழியன், நிர்வாகிகள் சர்தார், பழனி, இலக்கிய அணி சின்னச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக அறிவித்த தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், வேலூர் லோக்சபா இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் வெற்றிக்காக தேர்தல் பணி செய்வது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X