உயர் அழுத்த மின் கம்பி உரசியதால் வாலிபர் பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
02:39

செஞ்சி: செஞ்சி அருகே சைக்கிளில் சென்ற போது, உயர் அழுத்த மின்கம்பி தோளில் உரசியதால், வாலிபர் பரிதாபமாக இறந்தார்.செஞ்சி தாலுகா பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் ஜெய்காந்த், 23; இவர் நேற்று காலை 6.30 மணிக்கு வீட்டிலிருந்து, பால் கொள்முதல் நிலையத்திற்கு பாலை ஊற்றுவதற்காக, சைக்கிளில் பாலப்பட்டு ஏரிக்கரை வழியாக சென்றார்.அப்போது, அறுந்து தொங்கிக்கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பி ஜெயகாந்த் தோள்பட்டையில் உரசியது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால், செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பொது மக்கள் புகார்பாலப்பட்டு கிராமத்தின் மின் பராமரிப்பு பணிகளை சிட்டாம்பூண்டி மின்நிலையத்தினர் கண்காணித்து வருகின்றனர். இந்த அலுவலகத்தில் புகார் செய்ய போன் வசிதி இல்லை. மொபைல் போன் பல நேரம் வேலை செய்வதில்லை. அறுந்து கிடந்த மின்கம்பியில் ஏற்கனவே பல இடங்களில் துண்டாகி இணைத்திருந்தனர்.சாலையின் குறுக்கே செல்லும் உயர் அழுத்த மின்கம்பியை சரியாக பராமரிக்காமல் போனதால்தான், மின் கம்பி அறுந்து விழுவதற்கு காரணம் என கிராம மக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X