திருக்கோவிலுார் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
02:39

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் பகுதியில் காதல் ஜோடிகளை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த டி.அத்திப்பாக்கம், தபோவனம், பைபாஸ் கீரனூர், அரும்பாக்கம், கனகனந்தல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தனியாக ஒதுங்கும் காதல் ஜோடிகளை குறிவைத்து வழிப்பறி செய்து, பாலியல் தொந்தரவுகளில் ஒரு கும்பல் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் சந்தப்பேட்டையைச் சேர்ந்த வடிவேல் மகன் மணிகண்டன், 26; பைக்கில் சென்றபோது, காவேரி சந்து அருகே வழிமறித்த இரண்டு நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்தனர்.அதேபோல் கனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கந்தன் மகள் சத்யா, 24; மொபட்டில் வீட்டிற்கு சென்றபோது கனகனந்தல் டாஸ்மார்க் அருகே பைக்கில் வந்த இரண்டு பேர் வழிமறித்து, கத்தியை காட்டி நகையை பறித்து சென்றனர்.அடுத்தடுத்து நடந்த இரண்டு சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர். எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி., மகேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.பைபாஸ் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் பைக்கில் வந்த இரண்டு பேரை நிறுத்தினர். போலீசாரை கண்டதும் இருவரும் பைக்கை போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், பள்ளிகொண்டாபட்டு கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் தங்கவேல், 32; மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த மாயவன் மகன் அண்ணாமலை, 27; என்பது தெரியவந்தது.இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், பிடிபட்ட இருவரும் பைக்கில் டி.அத்திப்பாக்கத்தில் துவங்கி திருக்கோவிலூர் பைபாஸ், அரும்பாக்கம் வரை காலை, மாலை வேலைகளில் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.இவ்வாறு வரும்போது காதல் ஜோடிகள் மறைவான இடத்தில் ஒதுங்குவதை குறிவைத்து, கத்தியை காட்டி மிரட்டி, நகை, பணத்தை பறித்துக் கொண்டு பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக திடுக் தகவலை தெரிவித்தனர்.இவர்கள் இருவரும், மணிகண்டன், சத்யா ஆகியோரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து பறித்துச் சென்ற நகை மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதற்கிடையில் போலீசார் தங்கவேல், அண்ணாமலை ஆகிய இருவரையும் விரட்டி சென்ற போது, கை முறிவு ஏற்பட்டது. இதனால் இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.சிகிச்சைக்கு பின்னர் இருவர் மீதும் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர். இருவர் மீதும் விழுப்புரம் மாவட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X