| தமிழ் மொழி உலகிலேயே உயர்ந்த மொழி உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேச்சு Dinamalar
தமிழ் மொழி உலகிலேயே உயர்ந்த மொழி உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேச்சு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
02:40

திருக்கோவிலூர்: 'உலகத்தில் மிக உன்னதமான மொழி தமிழ் மொழி, என கபிலர் விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் பேசினார்.திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழக கபிலர் விழா விருது வழங்கும் நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் விருதுகளை வழங்கி பேசியதாவது:தமிழர்கள் இயற்கையை போற்றக் கூடியவர்கள். உலகத்தின் அத்தனை இயக்கங்களுக்கும் ஆதாரமாக அமைந்தவர்கள். மிக வேகமாக செல்லக்கூடிய இந்த காலம், எந்திரத்தனமாக இயங்கக் கூடிய வாழ்க்கை முறைகள், நமக்கான அடையாளத்தையும், நமக்கான சிறப்பையும், தள்ளிவைத்துவிட்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்த பாரம்பரியமிக்க மொழிக்கும், கலாசாரத்திற்கும் சொந்தக்காரர்கள் நாம். எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணில் தோன்றிய, இந்த மொழியைச் சார்ந்த, இந்த கலாசாரத்தைச் சார்ந்த மக்கள் உலகத்திற்கே ஞானத்தை வழங்க கூடியவர்களாக இருந்தார்கள்.கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இந்த மண்ணில் தொல்காப்பியமும், அகத்தியமும் நின்று நிலவி இருக்கிறது. கி.பி., ஆரம்பித்த காலகட்டத்தில் உலகப் பொதுமறையான திருக்குறள் இருந்திருக்கிறது.இந்த மொழி, இந்த மண், இந்த கலாசாரம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் உலகத்தில் தோன்றிய அனைவருக்கும் பொதுவான நூலாக இன்றும் நிலவக்கூடிய பொது நூலாக திருக்குறள் இருந்து கொண்டிருக்கிறது.நாம் தமிழை உணர்ந்தால்தான், அதன் மேன்மையை, பண்பாட்டை, உள்வாங்கினால் தான், தமிழர்களாக, நம் அடையாளத்தை எடுத்துச் செல்ல முடியும்.அப்போதுதான்நாம் மொழிக்கான பண்பாட்டை உண்மையாக நிறைவேற்றியவர்களாக இருப்போம்.இவ்வாறுஉயர் நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் பேசினார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X