| கண்காட்சி நிறைவு Dinamalar
கண்காட்சி நிறைவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
06:50

மதுரை : மதுரை மடீட்சியாவில் 'டெக்ஸ்ட் நெக்ஸ்ட் 2019' ஜவுளித் தொழில் கண்காட்சி நிறைவு விழா நடந்தது.

மாநகராட்சி கமிஷனர் விசாகன் பேசியதாவது: வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எல்லா நிறுவனங்களும் ஒத்துழைத்தால் வைகை சுத்தமாகும். தடுப்பணை கட்டிய பின் வைகையில் வரும் நீர் நேரடியாக தெப்பக்குளத்தில் தேக்கப்படும். இக்கண்காட்சி மதுரையில் ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு உதவும், என்றார்.

கைத்தறி துறை இணை இயக்குனர் மகாலிங்கம், டான்சியா தலைவர் அன்புராஜ், மடீட்சியா தலைவர் முருகன், செயலாளர் முருகானந்தம், கண்காட்சி தலைவர் வீரப்பன், துணைத் தலைவர்கள் கார்த்திக் பிரபு, ஸ்டாலின், சரவணக்குமார், சங்கர்பாபு பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X