| கல்விக்கொள்கை கருத்தரங்கு ஆசிரியர் கூட்டமைப்பு முடிவு Dinamalar
கல்விக்கொள்கை கருத்தரங்கு ஆசிரியர் கூட்டமைப்பு முடிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
06:50

மதுரை : தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை குறித்து மாவட்ட அளவில் கருத்தரங்குகள் நடத்துவது என இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானித்தது.

மாநில தலைமைக்குழு கூட்டம், மாநில நிர்வாக குழு கூட்டம் மதுரை மூட்டா அலுவலகத்தில் நடந்தது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலர் மயில் தலைமை வகித்தார்.

தேசிய பெண் ஆசிரியர் தலைமை பயிற்சி முகாமை செப்டம்பரில் திண்டுக்கல்லில் நடத்துவது, கல்விக்கொள்கை குறித்து கருத்தரங்குகள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில பொதுச்செயலர் ரவிச்சந்திரனின் சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது.

நிர்வாகிகள் மணிமேகலை, ஜோதி பாபு, சுரேஷ், சிவக்குமார், மாயவன், சேது செல்வம், ஜனார்த்தனன், சங்கர், சிவரமேஷ், ஐசக் சாம்ராஜ், ரவிச்சந்திரன், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X