மழை காலங்களில் அதிக மரக்கன்றுகள் நடுங்கள் 'பிளீஸ்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
07:14

மரங்கள் இல்லாததால் மழை இல்லை. எங்கும் தண்ணீர் தட்டுப்பாடு. தண்ணீர் தேடி மக்கள் அலைகின்றனர். நீர்நிலைகளின் நிலைமை மோசமாக உள்ளது. வறண்டும், கழிவுநீர் சேரும் இடமாகவும் உள்ளது. இதற்கு காரணம் நீர்நிலைகளை சுற்றி மரங்கள் வளர்ப்பதில்லை. நம் முன்னோர்கள் வளர்த்த மரங்களை நாம் பராமரிக்காமல் வெட்டி சாய்த்து விட்டோம். மரங்கள் அடர்ந்து இருந்தால் மழை பெய்வது உறுதி.

மரங்களின் தேவையை நாம் இப்போது தான் உணர்ந்து இருக்கிறோம். கடும் வறட்சி, மழையின்மைக்கு காரணம். மரங்களை வெட்டி சாய்த்து விட்டு, அதன் விளைவை அனுபவித்து வருகின்றோம். பலஆண்டுகளாக வளர்ந்த மரங்களை சில நிமிடங்களில் வெட்டி தள்ளுவதில் இருக்கும் ஆர்வம், மரங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை. கடும் வறட்சியினால் விவசாயம் இல்லாமல் போய் விட்டது.

இப்போது தான் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அருப்புக்கோட்டையில் தன்னார்வலர்கள், பொது நல அமைப்புகள் களத்தில் குதித்து மரங்களை தெரு தெருவாக நட்டு பராமரிக்கின்றனர்.

ஒரு லட்சம் மரங்களை நட்டு, நகரை சோலையாக்குவோம் என்ற முனைப்பில் 'வனத்திற்குள் அருப்புக்கோட்டை அமைப்பு' களத்தில் இறங்கியுள்ளது. இதுபோன்று பல அமைப்புகள் மரங்கள் வளர்ப்பதில் அக்கறை காட்டுகின்றன. அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் செல்லும் சாலை இருமருங்கிலும் குளு,குளுவென மரங்கள் அடர்த்தியாக உள்ளன.

அந்த காலத்தில் இந்த கிராம முன்னோர்கள் மரங்கள் வளர்ப்பதில் அக்கறை கொண்டு மரங்களை வளர்த்துள்ளனர். கிராமத்தினரும் மரங்களை வெட்டாமல் இன்றுவரை பேணி பாதுகாத்து வருகின்றனர். மெயின் ரோட்டிலிருந்து ஒன்றரை கி.மீ., துாரம் வரை மரங்களால் குளிர்ந்து காட்சி தருகிறது. ஊர் மக்கள் மரங்களை மட்டும் வெட்டுவதில்லை என்ற உறுதியில் உள்ளனர்.

இதேபோல், கண்மாய்கள், ஊரணிகள், பொது இடங்கள்,. அரசு அலுவலகங்கள் என மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். பொது இடங்கள், ரோட்டோரங்களில் மரங்களை வளர்க்கலாம். பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களை கொண்டு பராமரிக்கலாம்.



நீர்நிலைகளில் மரங்கள்

நகரில் உள்ள கண்மாய்கள், ஊரணிகள், சாலையோரங்களில் மழைக்காலங்களில் மரங்களை நட வேண்டும். இருக்கின்ற மரங்களை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும். பொதுமக்களுக்கும் மரங்களின் அவசியத்தை உணர்ந்து தங்கள் வீடுகளில் ஒரு மரமாவது வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். பல பொது நல அமைப்புகளும் மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

-சோலையப்பன், இயற்கை ஆர்வலர்



மரங்கள் வளர்ப்பு அவசியம்

'வனத்திற்குள் அருப்புக்கோட்டை அமைப்பு' மூலம் நகரில் ஆயிரக்கணக்கான மரங்களை பல பகுதிகளில் நட்டு வளர்த்து பராமரித்து வருகிறோம். தெரு, தெருவாக சென்று மரங்களை வளர்ப்பின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துகிறோம். மக்களுக்கும் மரம் வளர்ப்பதில் ஆர்வம் வந்துள்ளது. திருமணங்கள், கிரகப்பிரவேஷம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கும் பழக்கத்தை வைத்துள்ளனர்.

-கனகராஜ், சமூக ஆர்வலர்

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X