| நாய்கள் கடித்து மான் பலி Dinamalar
நாய்கள் கடித்து மான் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
07:14

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகேயுள்ள சுக்கிலநத்தம் கண்மாயை ஒட்டியுள்ள காட்டு பகுதிகளில் மான்கள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகிறது.

நேற்று காலை ஒரு வயதுள்ள புள்ளிமான் தண்ணீர் தேடி, கண்மாய் வழியாக வழி தவறி, ஊருக்குள் வந்து விட்டது. மானை பார்த்த தெரு நாய்கள் விரட்டி கடித்தது. காயம் பட்ட மான் இறந்தது.

ஊர்மக்கள் இதுகுறித்து வத்திராயிருப்பு வன சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் வனசரக அலுவலர் கோவிந்தன் தலைமையில், வனக்காப்பாளர் ஜெயச்சந்திரன், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு ஆகியோர் புள்ளிமானை மலைப்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் சரவணன் முன்பு, மான் உடல் பரிசோதனை செய்யப்பட்ட பின்பு, காட்டில் புதைக்கப்பட்டது.


 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X