குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
07:14

பாழாகும் நீர்வரத்து ஓடை

ஸ்ரீவில்லிபுத்துார் கீழப்புதுத்தெருவில் நீர்வரத்து ஓடை ஒன்று உள்ளது. பெரியகுளம் கண்மாய் நிறைந்தால் இந்த நீர்வரத்து ஓடை வழியே தான் பிற பகுதி பாசன வசதிக்கு நீர் செல்லும். இங்கு பொதுமக்கள் குப்பையை கொட்டி ஓடையை அசுத்தப்படுத்தி வருகின்றனர். இதை கட்டுக்குள் கொண்டுவர நகராட்சி சார்பில் கம்பி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துராமகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்துார்.

ரோட்டில் கழிவுநீர்

விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் வாறுகால் நிரம்பி ரோட்டுக்கு வருகிறது. முறையாக துார்வாராமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் செய்கிறது. உடனடியாக வாறுகாலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஜே.நவநீதன், விருதுநகர்

தேவையற்ற வேகத்தடைகள்

திருத்தங்கல் ஒன்றியம் செங்கமலபட்டியில் 80 அடி ரோட்டில் 4 வேகத்தடைகள் அமைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் அவ்வழியே செல்வோருக்கு விபத்து அபாயம் உள்ளது.

வி.ராமசாமி, செங்கமலபட்டி.

நடுத்தெருவில் மின்கம்பம்

ராஜபாளையம் ஒன்றியம் காயாமொழி தெருவில் தெரு நடுவே மின்கம்பம் உள்ளது. போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதை அகற்றி வேறு இடத்தில் நட மின் ஊழியர்களிடம் கேட்டால் பணம் கேட்கின்றனர். மின்கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் நட மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தோஷ், நல்லமங்கலம்.

வாறுகாலை பராமரிப்பதில்லை

வத்திராயிருப்பு வ.புதுபட்டி பேரூராட்சி சேசபுரத்தில் வாறுகால்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இப்பகுதியில் சுகாதார சீர்க்கேடு நிலவுகிறது. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.ரகுவரன், வ.புதுபட்டி

அடிப்படை வசதியில்லை

ராஜபாளையம் கீழராஜகுலராமன் ஊராட்சி கீழத்தெரு இந்திராகாலனியில் ரோடு, குடிநீர் வசதி போன்ற எவ்வித அடிப்படை வசதியும் முறையாக இல்லை. தெருவிளக்கு வசதியும் போதுமானதாக இல்லை. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெ.மாரிமுத்து, இந்திராகாலனி.

வாறுகாலை துார்வார வேண்டும்

விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சி முத்தால்நகர் பாலன் தெருவில் வாறுகாலை முறையாக பராமரிப்பதில்லை. வாறுகாலில் கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணேசன், முத்தால்நகர்.

நாய்த்தொல்லை அதிகம்

சாத்துார் ஒன்றியம் மேட்டமலை ஊராட்சி நாய்த்தொல்லை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் தெருக்களில் நடமாட முடியாமல் சிரமப்படுகின்றனர். நாய்த்தொல்லையை கட்டப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.குமார், மேட்டமலை.

குடிநீர் வேண்டும்

சிவகாசி சித்துராஜபுரம் ஊராட்சி காயாம்புநகரில் கடந்த 5 மாதமாக குடிநீர் சப்ளை இல்லை. பொதுமக்கள் பொதுக்குழாய்களில் குடிநீர் பெற கூட்டம் அலைமோதுகிறது. அனைவருக்கும் தேவையான குடிநீர் கிடைப்பதில்லை. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.மகாலெட்சுமி, காயாம்புநகர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X