| மருந்துகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி., எதிர்பார்ப்பில் மருந்து வியாபாரிகள் Dinamalar
மருந்துகளுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி., எதிர்பார்ப்பில் மருந்து வியாபாரிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
07:14

ஸ்ரீவில்லிபுத்துார் : மக்களின் நோய் தீர்க்கும் அனைத்து வகை மருந்துகளுக்கும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கும் வகையில், அதனை மாற்றியமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென மொத்த மருந்து விற்பனையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாட்டில் ஜி.எஸ்.டி.அமுல்படுத்தும் முன்பு வரை, தமிழகத்தில் பல்வேறு மருந்துகளுக்கு 5 சதவீதம் வரி மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜி.எஸ்.டி., அமுலுக்கு வந்த பிறகு, தற்போது மருந்து பொருட்களுக்கு 5 முதல் 18 சதவீதம் வரை, பல்வேறு நிலைகளில் வரிகள் விதிக்கபடுகிறது.

இதனால் மருந்து பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும், மொத்த மருந்து விற்பனையாளர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, அடுத்து நடக்கவுள்ள ஜி.எஸ்.டி., கூட்டத்தில், அனைத்து மருந்துகளுக்கும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி., என்ற நிலைக்குள் கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மொத்த மற்றும் சில்லரை மருந்து வியாபாரிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X