| பணம் கொடுத்தும் 'நோட்டீஸ்': அதிர்ச்சியில் பெண் சாவு: மோசடி தலைவியை கைது செய்யக்கோரி சாலைமறியல் Dinamalar
பணம் கொடுத்தும் 'நோட்டீஸ்': அதிர்ச்சியில் பெண் சாவு: மோசடி தலைவியை கைது செய்யக்கோரி சாலைமறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
08:08

சேலம்: பணம் கொடுத்தும், நோட்டீஸ் வந்த அதிர்ச்சியில், பெண் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால், பணத்தை வாங்கிக்கொண்டு, வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்த, மகளிர் சுய உதவிக்குழு தலைவியை கைது செய்யக்கோரி, மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.


சேலம், கோட்டை, அண்ணா நகரைச் சேர்ந்தவர், ரெஜியாபேகம், 48. அதே பகுதியில், மகளிர் சுயஉதவிக்குழு தலைவியாக செயல்பட்டுவந்தார். வங்கியில், சுயஉதவிக்குழு பரிந்துரைப்படி, கடன் பெற்றவர்களிடம் பணத்தை வசூலித்து, செலுத்தி வந்தார். அப்பகுதியைச் சேர்ந்த, சுப்ரமணி மனைவி ஆராயி, 47. இவர், வங்கியில் பெற்ற கடனுக்கு, 80 ஆயிரம் ரூபாயை, ரெஜியாபேகத்திடம் கொடுத்துள்ளார். அவர், வங்கி கணக்கில் செலுத்தவில்லை. அதேபோல், அப்பகுதியிலுள்ள, 50க்கும் மேற்பட்ட பெண்களிடமிருந்து, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலித்து, தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், வங்கியிலிருந்து, ஆராயிக்கு, 'நோட்டீஸ்'வர, அதிர்ச்சி அடைந்த அவர், நேற்று மாலை, மாரடைப்பில் உயிரிழந்தார். இதனால், அப்பகுதி மக்கள், 100க்கும் மேற்பட்டோர், மோசடியில் ஈடுபட்ட ரெஜியாபேகத்தை கைது செய்யக்கோரி, பழைய பஸ் ஸ்டாண்ட், ஆட்கொல்லி பாலம் அருகே, சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. டவுன் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X