| 'குடி'மகன்களால் மாணவியர் கலக்கம் Dinamalar
'குடி'மகன்களால் மாணவியர் கலக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
08:09

மல்லூர்: மல்லூரில், நாமக்கல் மாவட்ட எல்லையில், அரசு மதுக்கடை உள்ளது. அங்கு, சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையோரம், ஏராளமான இறைச்சி கடைகள் உள்ளன. மாலை, மது, இறைச்சி கடைகள் முன், நெடுஞ்சாலையில், ஏராளமான இருசக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இறைச்சி கடை அருகே, மது அருந்துவதால், நெடுஞ்சாலை திறந்தவெளி பாராக மாறியுள்ளது. மாலை, வீடு திரும்பும், மல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மாதிரிப்பள்ளி மாணவியர் அச்சத்துடன் செல்கின்றனர். இதனால், போலீசார், அடிக்கடி ரோந்து மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X