| விபத்து நீண்ட கால வலியை தரும்: கூட்டத்தில் டி.எஸ்.பி., பேச்சு Dinamalar
விபத்து நீண்ட கால வலியை தரும்: கூட்டத்தில் டி.எஸ்.பி., பேச்சு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
09:31

கரூர்: கரூர் மாவட்டம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.


இதில், டி.எஸ்.பி., அசோகன் பேசியதாவது: நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களால், சாலை விபத்து என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. எனினும் சிக்னலில் நின்று செல்வது, மிதவேகமாக செல்வது, நிர்ணயிக்கப்பட்ட எடையை கனரக வாகனங்களில் ஏற்றி செல்வது என்பன போன்ற சாலை விதிகளை பின்பற்றி, வாகனத்தை இயக்கினால் விபத்துகளை குறைக்க முடியும். இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட், கார் ஓட்டுனர்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும். இதன் மூலம் உயிரிழப்பை தடுக்கலாம். விபத்தில், உயிரிழப்போருக்கு சில நிமிடம் வேதனையாக இருக்கும். அவர்கள் சார்ந்த குடும்பத்தினர், உறவினர்களுக்கு நீண்ட கால வலியை தரும். இதை சிந்தித்து பார்த்து சாலையில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, சாலை பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, ஓவியம், பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், சாலை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக, சின்னதாராபுரம் முக்கிய வீதிகளில் மாணவ, மாணவியர் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இன்ஸ்பெக்டர் திருமேனி, பள்ளி தலைமையாசிரியர்கள் விஜயலட்சுமி, முத்துசாமி, முதுகலை ஆசிரியர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X