| மருதூரில் சாலையோர மரங்களை பாதுகாக்க மக்கள் வேண்டுகோள் Dinamalar
மருதூரில் சாலையோர மரங்களை பாதுகாக்க மக்கள் வேண்டுகோள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
09:31

குளித்தலை: மருதூர், மேட்டு மருதூர் நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் வளர்ந்த மரங்களை, பாதுகாக்க பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் பலன் தரும் தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு, பஞ்.,க்கு வருவாய் கிடைத்து வந்தது. மருதூர், மேட்டு மருதூர் நெடுஞ்சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வறட்சியால், 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் காய்ந்து முதிர்ந்து போனது. முதிர்ந்த தென்னை மரத்தடியில், நெடுஞ்சாலை இருபுறங்களிலும் வேப்பமரம், அரசமரம், புளியமரம் என, பல மரங்கள் இயற்கையாகவே வளர்ந்துள்ளன. இந்த மரங்களை, பொது மக்கள் அடுப்பு எரிக்கும் விறகுக்கு வெட்டாமல் தடுக்கும் வகையில், டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X