| கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூடம்: திறப்பு எப்போது: மக்கள் எதிர்பார்ப்பு Dinamalar
கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூடம்: திறப்பு எப்போது: மக்கள் எதிர்பார்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
09:31

குளித்தலை: நங்கவரம் டவுன் பஞ்சாயத்து சமுதாய கூடத்தின் பணிகள் முடிந்துள்ளதால், பொது மக்கள் பயன்பாட்டுக்கு விட, கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., சார்பில், 2015-16ம் ஆண்டில் ரூ.50 லட்சம் மதிப்பில், நங்கவரம் வாரச்சந்தை அருகே சமுதாய கூடம் கட்டி முடிக்கப்பட்டது. அதன் பின், கூடுதல் நிதியாக ரூ.55 லட்சத்தில், 2016-17ல் உணவு கூடம் கட்டப்பட்டது. நங்கவரம் டவுன் பஞ்., மற்றும் சுற்று பகுதி கிராம மக்கள் தங்களது இல்ல நிகழ்ச்சிகள், அரசியல் கட்சியின் பொது நிகழ்ச்சிகள் குறைந்த கட்டணத்தில் நடத்திக் கொள்ளும் வகையில் சமுதாய கூடம் கட்டப்பட்டது. இந்நிலையில், டவுன் பஞ்., அலுவலகம் புதியதாக கட்ட தொடங்கியதால், தற்காலிகமாக சமுதாய கூடத்தில் பஞ்., அலுவலகம் ஒன்றரை ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், புதிய டவுன் பஞ்., அலுவலகத்தை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்ட சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், டவுன் பஞ்., செயல் அலுவலரிடமும் பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது குறித்து டவுன் பஞ்., செயல் அலுவலர் விஜயசங்கர் கூறியதாவது: புதிய சமுதாக கூடத்திற்கு வாடகை கட்டணம் வசூல் செய்வது குறித்து, உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கடிதம் வைக்கப்பட்டுள்ளது. கடிதம் வந்தவுடன், வாடகை கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். சமுதாய கூடத்திற்கு சுற்றுசுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிக்கு விடப்படும். இவ்வாறு அவர் கூறினார். காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைந்த மாவட்ட துணை செயலாளர் கவுண்டம்பட்டி சுப்பிரமணியன் கூறுகையில்,'' சமுதாய கூடம், எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ, அந்த நோக்கம் வெற்றி பெற பொது மக்கள் பயன்பாட்டுக்கு அனைத்து வசதிகளுடன் வழங்கிட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X