அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
09:38

குப்பை குவிப்பு; மாணவர்கள் அவதி: குமாரபாளையம், ஓலப்பாளையம் செல்லும் சாலையில், தண்ணீர் தொட்டி அருகே, அதிகளவில் குப்பை கொட்டப்படுகிறது. கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால் அருகே உள்ள அரசு கல்லூரி மாணவ, மாணவியர் பெரும் அவதியடைய நேரிடுகிறது. இந்த இடத்தில் குப்பை கொட்ட தடை விதிக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சுகாதாரக்கேடு சீரமைக்கணும்: பள்ளிபாளையம் ஒன்றியம், ஆர்.எஸ். வழி தடத்தில் பெரியகாடு பிரிவு சாலை எதிரில், குப்பை, கழிவுகள் கொட்டப்படுகின்றன. தற்போது, பரவலாக கொட்டப்படுவதால், குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டது. இதனால் தூர்நாற்றம் வீசி, சுகாதார கேடாக காணப்படுவதால், அருகில் வசிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். இங்கு குப்பை கொட்ட தடை செய்து, எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கழிவு நீரால் மக்கள் கடும் அவதி: மல்லசமுத்திரம் ஒன்றியம், மொஞ்சனூர் அருந்ததியர் தெருவில், 60க்கும் அதிகமான குடியிருப்பு களில் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள கால்வாயில் பல நாட்களாக, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், துர்நாற்றம் வீசி வருவதால், சுவாச கோளாறு ஏற்பட்டு பகுதியினர் அவதிப்படுகின்றனர். மேலும், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கழிவுநீரை தூர்வார வேண்டியது அவசியம்.


பிரிவு சாலையில் பலகை அவசியம்: மல்லசமுத்திரம் அடுத்த, பொன்.கல்லுபாளையத்தில் கோப்பம்பட்டி, பொன்குறிச்சி, மொஞ்சனூர் ஆகிய பகுதிகளுக்கு சாலை பிரிந்து செல்கிறது. இவ்வழியாக, புதிதாக வருவோர் தாங்கள் செல்ல வேண்டிய வழியில் செல்லாமல், வேறு வழியில் சென்று விடுகின்றனர். இதனால், அவர்களின் காலநேரம் வீணடிக்கபட்டு, பெரிதும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். எனவே, பிரிவுசாலையில் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தேங்கும் வடிகால்நீரை அகற்ற வேண்டும்: குமாரபாளையம் அருகே, பச்சாம் பாளையம் நான்கு ரோடு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர், வடிகாலில் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. துர்நாற்றம் வீசுவதால், இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை. பலருக்கும் தொற்று நோய் ஏற்பட காரணமாக இருக்கும் கழிவு நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X