காவிரி கரையோரம் சோதனை 40 யூனிட் மணல் பறிமுதல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
09:38

மோகனூர்: ஆற்றில் அனுமதியின்றி திருடி, 3,000 மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த, 40 யூனிட் மணலை, போலீசார் பறிமுதல் செய்தனர்.


மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் இருந்து, இரு சக்கர வாகனத்தில், சாக்கு மூட்டையில், மணல் கடத்தி வரப்பட்டு, ஒரு இடத்தில் குவித்து வைத்து, சரக்கு ஆட்டோ, லாரி மூலம் வெளியிடங்களுக்கு கடத்தி செல்கின்றனர். அவற்றை, வருவாய்த்துறையும், போலீசாரும் அவ்வப்போது வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகின்றனர். இருந்தும், மணல் கடத்தலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து இரவும், பகலும், மணல் கடத்தல் நடப்பதால், போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில், மோகனூர் சுற்று வட்டாப்பகுதிகளில், ஆற்றில் திருடப்பட்ட மணல், சாக்கு மூட்டைகளில் அடுக்கி வைத்திருப்பதாக, நாமக்கல் எஸ்.பி., அருளரசுக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின்படி, மோகனூர் இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில், 10க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை முதல், இரவு வரை, ஒருவந்தூர், மணப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில், ஆற்றங்கரையோரம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஏராளமான மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 12 லாரிகளில் ஏற்றினர். 3,000 மூட்டைகளில், 40 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 'இரு சக்கர வாகனங்களில், மணல் கடத்தி செல்வதை, சம்பந்தப்பட்ட நபர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். மீறி கடத்தினால், கைது செய்வதுடன், வாகனங்கள பறிமுதல் செய்யப்படும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.


 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X