கோவில் விழாவில் அன்னதானம் சாப்பிட்ட மூதாட்டி பலி: 200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
09:52

குமாரபாளையம்: குமாரபாளையம், கோவில் விழாவில் அன்னதானம் சாப்பிட்ட, 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மூதாட்டி பலியான நிலையில், அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே, சேலம்-கோவை புறவழிச்சாலை வட்டமலை தனியார் கல்லூரி அருகே, சில நாட்களுக்கு முன்பு விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. தினமும் மண்டல பூஜை நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த, 19ல், இரவு இட்லி வழங்கப்பட்டது. ஏராளமானோர் சாப்பிட்டுள்ளனர். இவர்களுக்கு நேற்றுமுன்தினம் முதல், வயிற்று வலி, குமட்டல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், வட்டமலையை சேர்ந்த கோபால் என்பவரின் மனைவி ரத்னா, 68, என்பவருக்கு மயக்கம் ஏற்படவே, அவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். நேற்று மேலும் மோசமடைந்த, 50க்கும் மேற்பட்டோர் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 200க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழும் நிலை தொடர்ந்ததால், தட்டான்குட்டை, எலந்தக்குட்டை, திருச்செங்கோடு உள்ளிட்ட நடமாடும் மருத்துவக்குழுவினர், சம்பவ இடத்திற்கு சென்று சிறப்பு முகாம் நடத்தினர். ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு, குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், பண உதவியும் செய்தார். அன்னதானம் குழுவினர், ராமேஸ்வரம் சென்ற நிலையில், போலீசார் போன் செய்தும் யாரும் எடுக்கவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X