| ரேஷன் கடைகளுக்கு கெரசின் ஒதுக்கீடு குறைவு: பணியாளர்களுடன் மக்கள் வாக்குவாதம் Dinamalar
ரேஷன் கடைகளுக்கு கெரசின் ஒதுக்கீடு குறைவு: பணியாளர்களுடன் மக்கள் வாக்குவாதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
23:31

உடுமலை:ரேஷன்கடைகளுக்கு குறைந்தளவே மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், ரேஷன் கடை பணியாளர்களுடன், மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகியுள்ளது.உடுமலை தாலுகாவில், ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ளன. பொது வினியோக திட்டத்தின் கீழ், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உட்பட கூட்டுறவு அமைப்புகளின் கட்டுப்பாட்டில், ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.


மாதம்தோறும், ரேஷன்கார்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில், வட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவு துறை உயர் அதிகாரிகளுக்கு, ரேஷன் கடை பணியாளர்கள் கருத்துரு அனுப்புகின்றனர்.இதன் அடிப்படையில், பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நுகர்பொருள் வாணிபக்கிடங்கு மூலம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. இதில், மண்ணெண்ணெய் வினியோகமும், பொது வினியோக திட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.கடந்த சில ஆண்டுகளாகவே, மண்ணெண்ணெய், பற்றாக்குறையாகவே ஒதுக்கீடு செய்யப்படுவதாக, ரேஷன்கடை பணியாளர்கள் புலம்பி வருகின்றனர். தற்போது, இந்த அளவும் குறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.


பருவமழைக்காலத்தில், கிராமப்புறங்களில், தொழிலாளர்கள் குடும்பங்களில், அதன் பயன்பாடு அதிகமிருக்கும். எனவே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், ரேஷன்கடைகளில், மண்ணெண்ணெய் வினியோகிக்கும் நாட்களுக்காக கிராம மக்கள் காத்திருப்பது வழக்கம்.ஆனால், இம்மாதத்துக்கான ஒதுக்கீடு தாமதமாகவும், குறைவாகவும் ரேஷன்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


அனைத்து கடைகளுக்கும், 40 சதவீதம் வரை, பற்றாக்குறையாகவே, மண்ணெண்ணெய் வினியோகிக்கப்பட்டுள்ளது.இது குறித்து விளக்கமளித்தாலும், ஏற்றுக்கொள்ளாத மக்கள், ரேஷன்கடை பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கமாகி விட்டது. பருவமழைக்காலத்தில், ரேஷன் கடைகளுக்கு தேவையான மண்ணெண்ணெய் கிடைக்கும் வகையில், வட்ட வழங்கல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X