| ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் Dinamalar
ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
00:17

கடலுார் : தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் கடலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சம்பள கமிட்டி அறிக்கையினை உடனடியாக அமல்படுத்தக் கோரியும், 30 அம்ச கோரிக்கையினை நிறைவேற்றக் கோரியும், கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. ரேஷன் கடை பணியாளர் நல சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் துரைசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தங்கராசு வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி, ரேஷன் கடை பணியாளர் சங்கம் முத்துபாபு, நடராஜ், செல்லதுரை, தேவராஜ், சிவா வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினர் பாலசுப்ரமணியம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X