| சிதம்பரத்தில் மாணவியை கடத்திய வாலிபருக்கு வலை Dinamalar
சிதம்பரத்தில் மாணவியை கடத்திய வாலிபருக்கு வலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
00:19

சிதம்பரம் : பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை, சிதம்பரம் போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் பாலமான்கரை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சுந்தரேசன் மகன் முத்துக்குமரன். இவர் 9ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். முத்துக்குமரனும், அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்2 வகுப்பு பயிலும் 17 வயது மாணவியும், காதலித்து வந்தனர்.




பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில், கடந்த 20ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியில் சென்ற மாணவி, நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரை, முத்துக்குமரன் ரயில்வே மேம்பாலம் அருகில் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக தெரிய வந்தது.புகாரின் பேரில், சிதம்பரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து பள்ளி மாணவியை கடத்திய முத்துக்குமரனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X