| விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் 10 ஆயிரம் குறுவை நெல் மூட்டைகள் Dinamalar
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் 10 ஆயிரம் குறுவை நெல் மூட்டைகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
00:21

விருத்தாசலம் : விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் குறுவை நெல் மூட்டைகள் குவிந்தன.



கடலுார் மாவட்டம், விருத்தாசலம், கம்மாபுரம், ராஜேந்திரப்பட்டினம், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பகுதிகளில், குறுவை நெல் அறுவடை, இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. அதே சமயம், பரவலாக மழை பெய்து வருவதால், நெல் அறுவடை இயந்திரத்தை வயலில் இறக்க முடியாத நிலை உள்ளது.இந்நிலையில், காற்று மழையால் சாய்ந்த நெல் கதிர்கள், முளைவிடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதால் மேடான பகுதிகளில் இயந்திரங்கள் மூலமும், தண்ணீர் தேங்கும் பகுதிகளில் ஆட்கள் மூலமும் அறுவடை பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.




இதனால், விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று ஒரே நாளில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு குவிந்தன. கமிட்டியில் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, புதிய மல்டி ஸ்டோரேஜ் பில்டிங் கட்டுவதால், இடப்பற்றாக்குறை உள்ளது. இதனால், நெல் மூட்டைகளை திறந்த வெளி குடோன்களில் அடுக்கி வைத்தனர். காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை வியாபாரிகள், நேற்று பிற்பகலில் உடனுக்குடன் லாரிகளில் ஏற்றி தார்பாய்களை போட்டு மூடி வைத்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X