| 'லேப்--டாப்' நல்லதுக்கு பயன்படுத்துங்க!' Dinamalar
'லேப்--டாப்' நல்லதுக்கு பயன்படுத்துங்க!'
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
00:55

திருப்பூர்:திருப்பூர், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச 'லேப்-டாப்' வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கல்வி அதிகாரி (பொறுப்பு) பழனிச்சாமி தலைமை வகித்தார்.எம்.எல்.ஏ., குணசேகரன் பங்கேற்று, லேப்டாப்களை வழங்கி பேசியதாவது:தற்போதைய புதிய பாடப்புத்தகத்தில், 'க்யூஆர்' கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாடங்களை தாண்டிய பொது அறிவை வளர்த்துக்கொள்ள இவ்வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல்வேறு தகவல்களை இலவச லேப்டாப்பை நல்லதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 'நீட், ஜே.இ.இ.,' போன்ற போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் எளிதாக தயாராகலாம் என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X