| செயல்பட துவங்கிய நுண்ணுயிர் கிடங்கு Dinamalar
செயல்பட துவங்கிய நுண்ணுயிர் கிடங்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
00:56

பல்லடம்:பல்லடத்தில், 5 மெட்ரிக் டன் அளவு கொண்ட நுண்ணுயிர் உரக்கிடங்கு, நகராட்சியின் பயன்பாட்டுக்காக நேற்று அர்ப்பணிக்கப்பட்டது.பல்லடம்-, தாராபுரம் ரோட்டில், நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில், நேற்று பயன்பாட்டுக்காக விடப்பட்டது. எம்.எல்.ஏ., நடராஜன் திறந்து வைத்தார்.


கமிஷனர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். 68.5 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த உரக்கிடங்கு, 5 மெட்ரிக் டன் அளவு கொண்டது.அதனால், நகராட்சியின் குப்பைகளை தரம் பிரிக்கவும், அவற்றை உரமாக மாற்றும் பணியும் எளிதாகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.அதேபோல், பல்லடம் நால்ரோடு சிக்னல் முதல், அண்ணா நகர் வரை, 75 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள், மற்றும் மங்கலம் ரோடு அரசு பள்ளி கல்லூரி, அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில், 3.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நிழற்குடைகளும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று அறிவிக்கப்பட்டன.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X