அரசு பொது மருத்துவமனை பகுதியில் 'பார்க்கிங்' பிரச்னை: அதிகாரிகள் ஆய்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
01:03

புதுச்சேரி : அரசு பொது மருத்துவமனையை சுற்றியுள்ள சாலைகளில் பார்க்கிங் வசதி ஒழுங்குபடுத்தப்பட உள்ளது.



புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், ஊழியர்கள், செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை, விக்டர் சிமோனல் வீதி ஆகிய இடங்களில் இரு சக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.இதனால், மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் எளிதில் வர முடியாமல், தினமும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது.




இதையடுத்து, அரசு மருத்துவமனை வளாகத்தை சுற்றியுள்ள சாலைகளில் பார்க்கிங்கை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, புதுச்சேரி நகராட்சி ஆணையர் அர்ஜுனன் ராமகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் வாசுதேவன் ஆகியோர், நேற்று ஆய்வு செய்தனர். செஞ்சி சாலையில் ஏழை நோயாளிகளுக்காக கடந்த 1996ல் கட்டப்பட்ட ஷெல்டர், அதே சாலையில் சுகாதாரத் துறை எதிரே உள்ள ஷெல்டரை பார்வையிட்டு, பார்க்கிங் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக விவாதித்தனர்.மருத்துவமனை அதிகாரிகள் கூறும்போது, 'அவசர சிகிச்சை பிரிவுக்கு தற்போது விக்டர் சிமோனல் வீதி வழியாக நோயாளிகள் அழைத்து வரப்படுகின்றனர்.




இந்த இடங்களில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால் ஆம்புலன்ஸ் உள்ளே வருவதில் சிரமம் உள்ளது. எனவே, நடைபாதை மீது சிமென்ட் சிலாப் அமைத்து, அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தவும், சாலையை விசாலப்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். மேலும், செஞ்சி சாலையில் இரவு நேரங்களில் நோயாளிகள் மற்றும் அவர்களின் உடன் வருவோர் தங்குவதற்காக கட்டப்பட்ட இல்லம் மூடியே கிடக்கிறது. இந்த இடத்தில் மருத்துவமனை ஊழியர்களின் வாகனங்களை நிறுத்த, நகராட்சியிடம் அனுமதி கேட்டுள்ளோம்' என்றனர். ஆய்வின்போது போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முருகையன், மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரவி, மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், மருத்துவமனை இளநிலைப் பொறியாளர் எழில்வண்ணன், நடராஜன் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X