| கல்வி அலுவலகம் சென்றால் ஒரு நாள்காலி; எல்லை குளறுபடியால் அவதி Dinamalar
கல்வி அலுவலகம் சென்றால் ஒரு நாள்காலி; எல்லை குளறுபடியால் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
01:49

வடவள்ளி:வடவள்ளி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளை, பெரியநாயக்கன்பாளையம் கல்வி வட்டாரத்தில் இணைத்திருப்பதால், ஆசிரியர்களும், மாணவர்களும் சிரமப்படுகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் கல்வி வட்டாரத்தில், 78 துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன.


இவ்வட்டாரத்துக்கு உட்பட்ட பள்ளிகளில், வடவள்ளி, வீரகேரளம், பொங்காளியூர், அஜ்ஜனுார், சுண்டப்பாளையம் ஆகிய ஐந்து பள்ளிகள் உள்ளன.இங்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். பள்ளிகள் தொடர்பாகவும், ஆசிரியர்களுக்கு உள்ள குறைகள் குறித்து தெரிவிக்கவும், பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலகத்துக்கு ஆசிரியர்கள் அடிக்கடி சென்று வருகின்றனர்.இப்பள்ளிகளில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலகம், 20 கி.மீ., துாரத்தில் உள்ளது. பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலகத்துக்குச் சென்று வந்தால், 4 அல்லது, 5 மணி நேரம் ஆகி விடுகிறது.ஆசிரியர்களின் பணி பாதிக்கப்படுவதோடு, மாணவர்களும் பாதிப்படைகின்றனர்.


இப்பள்ளிகளுக்கு, 6 கி.மீ., துாரத்தில் தொண்டாமுத்துார் வட்டார கல்வி அலுவலகம், 12 கி.மீ., துாரத்தில் பேரூர் வட்டார கல்வி அலுவலகம் செயல்படுகின்றன. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன் பிரிக்கப்பட்ட எல்லையை அடிப்படையாகக் கொண்டு, தற்போதும் நடைமுறையை பின்பற்றுவதுமே பிரச்னைகளுக்கு காரணம்.அருகில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தோடு இணைத்தால், பள்ளிகளுக்கு வசதிகள் விரைவில் கிடைப்பதோடு, ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் சிரமங்கள் இல்லாமல் இருக்கும், என, பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X