ஆர்.ஜி.புதூரில் குப்பையாகி போன குப்பைத்தொட்டி! சாலையோரம் குப்பை கொட்ட வேண்டிய அவலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
01:51

ரத்தினபுரியில் வீணாகும் மின்சாரம்ரத்தினபுரி, நஞ்சப்பன் வீதியில், 24 மணி நேரமும் எரியும் தெருவிளக்கால், மின்சாரம் வீணாகிறது.- ஜெயராம், ரத்தினபுரி.

ஜெகநாதன் நகரில் குப்பைமயம்ஹோப்காலேஜ், ஜெகநாதன் நகர் குடியிருப்பு பகுதியில், பல வாரங்களாக குப்பை அகற்றப்படாததால், தொட்டி நிரம்பி சாலையெங்கும் பரவிக்கிடக்கிறது.- வெங்கடாசலம், சோமனுார்.

வேளாளர் வீதியில்ரோடு சேதம்குனியமுத்துார், 88வது வார்டு, வேளாளர் வீதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை செப்பனிட்டு தர வேண்டும்.- பாலு, குனியமுத்துார்.

மாதம்பட்டி ரோட்டில் சாக்கடைநீர்தொண்டாமுத்துார், மாதம்பட்டி ரோடு, யூனியன் அலுவலகம் பின்புறம், கழிவுநீர் வடிகால் சீரமைக்கப்படாததால், சாலையில் சாக்கடை நீர் ஓடுகிறது.- புவனேஸ்வரன், தொண்டாமுத்துார்.

அரைகுறைப் பணியால் சிரமம்மலுமிச்சம்பட்டி, மதுரை வீரன் கோவில் வீதியில், புதுப்பிக்கும் பணிக்காக சாலையை தோண்டிய பின் தார் ஊற்றாததால், கற்கள் பெயர்ந்து வருகின்றன.- ரமேஷ், மலுமிச்சம்பட்டி.

ஆமை வேக பணியால் சிரமம்கணுவாய் முதல் மருதமலை ரோட்டில், ஆமை வேகத்தில் நடந்து வரும் சாலை விரிவாக்கப் பணிகளால், பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.- கோபாலகிருஷ்ணன், கணுவாய்.

திறந்தசாக்கடையால் ஆபத்துமதுக்கரை மார்க்கெட் ரோட்டில், பிரதான சாலை சந்திப்பில் மூடப்படாத சாக்கடை கால்வாயால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.- சண்முகசுந்தரம், மதுக்கரை.

வெள்ளலுாரில்குடிநீர் வீண்வெள்ளலுார் முதல் சிங்காநல்லுார் வரை செல்லும் சாலையில், கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக குழாய் உடைந்து, குடிநீர் வீணாகிறது.- நந்தகுமார், வெள்ளலுார்.

ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்புஉருமாண்டம்பாளையம், 43வது வார்டு, சில்வர் கார்டன் பகுதியில், ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பு குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கையில்லை.- கதிர்வேல்,சில்வர் கார்டன்.

ஹட்கோ காலனியில் ஒளியில்லைபீளமேடு, காந்திமாநகர், ஹட்கோ காலனி, முருகன் நகர் பகுதியில் தெருவிளக்குகள் பல வாரங்களாக எரியவில்லை.- பரேமஸ்வரன், காந்திமாநகர்.

செட்டிபாளையத்தில் குழாய் உடைப்புபோத்தனுார், செட்டிபாளையம் ரோடு, ஸ்ரீராம் நகர் மெயின் ரோட்டில் குழாய் உடைப்பால், தண்ணீர் வினியோகத்தின் போது குடிநீர் வீணாகிறது. - ஸ்ரீநிவாசன், போத்தனுார்.

விளக்குகள் பழுதுதொண்டாமுத்துார், 10வது வார்டு, ராமசாமி நகரில் கடந்த ஒரு வாரமாக தெருவிளக்குகள் எரியவில்லை.- ரவி, ராமசாமி நகர்.

சாலையை புதுப்பிக்கணும்கணபதி, கட்டபொம்மன் வீதியில், 18 ஆண்டுகளுக்கு முன் அமைத்த தார் ரோடு சேதமடைந்திருப்பதால், தினமும் விபத்து ஏற்படுகிறது. - நாராயணசாமி, கணபதி.

வேகத்தடை வேண்டும்மதுக்கரை ரோடு, சுந்தராபுரம் அடுத்த காமராஜ்நகர் நான்குரோடு சந்திப்பில் அதிவேக வாகனங்களைக் கட்டுப்படுத்த, வேகத்தடை அமைக்க வேண்டும்.- விஜயன், சுந்தராபுரம்.

100 அடி ரோட்டில் தடைகாந்திபுரம், 100 அடி ரோட்டில் சாலையில் சிதறிக்கிடக்கும் தடுப்புச் சுவர் கற்களை அகற்ற வேண்டும்.- கார்த்திக், காந்திபுரம்.

சவுரிபாளையத்தில் பாதை அடைப்புசவுரிபாளையம், கருணாநிதி நகர் முதல் சந்திரகாந்தி நகர் செல்லும் பாதையில், கட்டடக்கழிவுகள் குவிந்திருப்பதால், பயன்படுத்த முடியவில்லை.- யுவராஜ், பீளமேடு.

மூடப்படாத குழிகள்துடியலுார், டி.என்.பி.நகரில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகளை, பணிகள் முடிந்தும், மூடவில்லை.- அகல்யா, துடியலுார்.

காந்தி நகரில் சுகாதாரக்கேடுசரவணம்பட்டி, கீரணத்தம், காந்தி நகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில், பல மாதங்களாக துார்வாரப்படாத சாக்கடையில், கழிவுநீர் தேங்கி நிற்கிறது.- இளங்கோவன், கீரணத்தம்.

குப்பை தொட்டியே 'குப்பைதான்'சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதுார், பேஸ் 3, பி.எல்.எஸ்., நகரில், துருப்பிடித்து முழுவதும் ஓட்டைகளாக உள்ள தொட்டியை மாற்றித் தர வேண்டும். - மோகன்,பி.எல்.எஸ்., நகர்.

கோவில் அருகே கும்மிருட்டுபீளமேடு, ஏ.டி.காலனி, மகாலட்சுமி கோவில் அருகில் உள்ள மின் கம்பத்தில், விளக்கு எரிவதில்லை. இரவில் பக்தர்கள் கோவிலுக்கு வர தயங்குகின்றனர்.- ரகு, பீளமேடு.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X