பாக்சிங் வீராங்கனை திடீர் தற்கொலை ; பெற்றோர் கலெக்டரிடம் புகார் மனு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
01:52

கோவை:பாக்சிங் விளையாட்டு வீராங்கனை, திடீர் தற்கொலை செய்து கொண்டதால், அவரது போட்டோவுடன், கலெக்டரிடம் தந்தை கண்ணீர் மல்க புகார் மனு கொடுத்தார்.கோவை, பூசாரிபாளையம், நாயக்கர் தோட்டத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவரது மகள் யுரேகா,19, ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் தொழில்நுட்ப கல்லுாரியில், பி.இ., மெக்கானிக்கல் இரண்டாமாண்டு படித்து வந்தார். பாக்சிங் வீராங்கனையான யுரேகா, கடந்த 1ம் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.மகள் தற்கொலைக்கு கல்லுாரி நிர்வாகம் தான் காரணம் என்று, புவனேஸ்வரன், இவரது மனைவி ரூபா ஆகியோர், கலெக்டர் ராஜாமணியிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது: கல்லுாரி நிர்வாகம், எனது மகளை பாக்சிங் போட்டிக்கு இனிமேல் அனுப்ப முடியாது என்றும், அவர்கள் சொல்லும் போட்டியில் தான் பங்கேற்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். மீறி பாக்சிங் போட்டிக்கு சென்றால், ஓ.டி., தரமுடியாது. எங்கு சென்று பயிற்சி பெற்றாலும், கையெழுத்து எங்களிடம் தான் வரவேண்டும் என்று விளையாட்டு ஆசிரியர் மிரட்டியுள்ளார். பரீட்சை எழுத விடாமல் தடுத்துள்ளனர். எனது மகளை மிரட்டிய கல்லுாரி முதல்வர், உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.கல்லுாரி நிர்வாக இயக்குனர் மதன் செந்திலிடம் கேட்டதற்கு, ''மாணவியின் தற்கொலைக்கும், கல்லுாரி நிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கல்லுாரி கோடை விடுமுறையில், அந்த மாணவியின் வீட்டில் வைத்து தற்கொலை செய்துள்ளார். ஆனால், அவரது தந்தை பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். கல்லுாரி நிர்வாகத்திடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்துடன், பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகிறார்.மாணவி யுரேகா, கல்லுாரியில் படிக்கும் போதே, அவரது கல்வி செலவை, கல்லுாரி நிர்வாகம் இலவசமாக செய்து வந்தது. அவர் விளையாட்டு போட்டியில் பங்கேற்றதற்கான பயண செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும், கல்லுாரி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X