| 'வாசித்தால் வெற்றி நிச்சயம்'  Dinamalar
'வாசித்தால் வெற்றி நிச்சயம்' 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
01:58

கோவை:கோவை கொடிசியா வளாகத்தில், புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கொடிசியா மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.இதில் எட்டாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிக்கு, 3,600 கட்டுரைகள் வந்திருந்தன. இதில் ஐந்து கட்டுரைகள் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கபட்டன.நம்பியூர் அரசு மாதிரி பள்ளி மாணவி வெண்ணிலா, அவிலா கான்வென்ட் மாணவி ஐஸ்வர்யா, எஸ்.இ.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவி சஞ்சனா, முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.எழுத்தாளர் வண்ணநிலவன், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசுகையில், ''இளமையில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டவர்கள், வாழ்க்கையில் தோல்வி அடைவதில்லை; அவர்களுக்கு வெற்றி நிச்சயம்,'' என்றார்.ரோட்டரி சங்க தலைவர் மாதவ்சந்திரன், புத்தக கண்காட்சி தலைவர் விஜய்ஆனந்த், ரோட்டரி மாவட்ட இயக்குனர் முருகன், பள்ளி நூலக திட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது இர்பான், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X