| விரிவடைகிறது 'ஸ்மார்ட் சிட்டி' எல்லை! மேலும் 4 வார்டுகளுக்கு கிடைக்கும் பலன் Dinamalar
விரிவடைகிறது 'ஸ்மார்ட் சிட்டி' எல்லை! மேலும் 4 வார்டுகளுக்கு கிடைக்கும் பலன்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
01:59

கோவை:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், மேலும் நான்கு வார்டுகள் சேர்க்கப்பட்டு எல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது; நேற்று நடந்த இயக்குனரவை கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.மத்திய அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டங்கள் செயல்படுத்த, தனியார் நிறுவனம் போல், 'ஸ்மார்ட் சிட்டி' நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இதன் இயக்குனரவை கூட்டம், நேற்று, சென்னை நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் கூடியது.'ஸ்மார்ட் சிட்டி' சேர்மனான, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனரான, கமிஷனர் ஷ்ரவன்குமார் முன்னிலை வகித்தார்.கோவையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம், 14 வார்டுகளில் செயல்படுத்தப்படுகிறது. சில பணிகளை மேற்கொள்ள, எல்லை பிரச்னை தடையாக இருக்கிறது. வரையறுக்கப்பட்ட வார்டுகளை தவிர்த்து மற்ற இடங்களில் பணிகள் மேற்கொண்டால், நிதி விடுவிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.அதனால், 72, 86, 95, 99 ஆகிய நான்கு வார்டுகளை எல்லைக்குள் கொண்டு வர, தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 99வது வார்டில், வெள்ளலுார் குப்பை கிடங்கு வருகிறது. இனி, இக்கிடங்கிற்குள் 'ஸ்மார்ட் சிட்டி' நிதியில் பணிகள் மேற்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது.இதுதவிர, உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் இருந்து, வெள்ளலுாருக்கு சுத்திகரித்த நீரை கொண்டு செல்ல குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'பம்ப்பிங் ஸ்டேஷன்' கட்டுவதற்கு, ரூ.2.5 கோடி, சர்வதேச ஹாக்கி மைதானம் கட்ட ரூ.23.5 கோடி.இதில், ஏற்கனவே, 4.5 கோடிக்கு மாநகராட்சி நிதியில் செலவழிக்கப்பட்டு இருப்பதால், மீதமுள்ள, ரூ.19 கோடி, உக்கடத்தில், 3.6 மெகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் கட்டுமிடத்தில் சுற்றுச்சுவர், ரோடு போடுவதற்கு ரூ.2.5 கோடி, எல்.இ.டி., விளக்கு பொருத்த ரூ.25 லட்சம், மழை நீர் வடிகால் துார்வாருதல், கட்டட கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான நவீன இயந்திரங்கள் வாங்க ரூ.2.85 கோடி ஒதுக்கி, இயக்குனரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.


ஸ்மார்ட் சிட்டி இயக்குனர்களான, துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி, ராஜ்குமார், கிருத்திகா, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அலுவலக தலைமை பொறியாளர் நடராஜன், நகர பொறியாளர் லட்சுமணன், நிர்வாக பொறியாளர் சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 72, 86, 95, 99 ஆகிய நான்கு வார்டுகளை எல்லைக்குள் கொண்டு வர, தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 99வது வார்டில், வெள்ளலுார் குப்பை கிடங்கு வருகிறது. இனி, இக்கிடங்கிற்குள் 'ஸ்மார்ட் சிட்டி' நிதியில் பணிகள் மேற்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X