கொலையான பெண்ணின் தாய்க்கு நியமன உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
02:00

கோவை:மேட்டுப்பாளையத்தில், கொலை செய்யப்பட்ட வர்சினி பிரியாவின் தாயாரை, ஆதிதிராவிட நலத்துறை மாணவியர் விடுதியில், சமையலராக பணி நியமனம் செய்து கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார்.மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரும், அதே பகுதியை சேர்ந்த வர்சினி பிரியா என்ற இளம்பெண்ணும், காதலித்தனர். இவர்களது காதலுக்கு கனகராஜின் சகோதரர் வினோத், எதிர்ப்பு தெரிவித்தார்.கடந்த மாதம், தன் நண்பர்களுடன் சேர்ந்து, காதல் ஜோடியை அரிவாளால் வெட்டி வினோத் கொலை செய்தார். கொல்லப்பட்ட வர்சினி பிரியாவின் குடும்பத்தினருக்கு, அரசு சார்பில், 4 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. இந்நிலையில், வர்சினி பிரியாவின் தாயார் அமுதாவை, எஸ்.புங்கம்பாளையம் அரசு ஆதிதிராவிட நலத்துறை மாணவியர் விடுதியில், சமையலராக பணி நியமனம் செய்து கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார்.இதற்கான ஆணையை, நேற்று கலெக்டர் வழங்கினார். ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி பிரபாகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X