மாணவர்களின் கற்றல் திறன் குறைந்தால் நடவடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
02:31

மதுரை : 'துவக்கப் பள்ளிகளில் மாணவர்களிடம் வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத் திறன் உள்ளதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதில் தவறு இருப்பதாக சிறப்புக்குழு ஆய்வில் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.




மதுரை பார்க்டவுனைச் சேர்ந்தவர் சவுபாக்கியவதி. மதுரை மாவட்டம் நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி (ஆங்கிலம்) ஆசிரியர். பள்ளியில் மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் ஆய்வு செய்தார். ஆறாவது வகுப்பு ஆங்கில பாடத்தில் மாணவர்கள் வாசிப்புத் திறன் குறைவாக இருந்தது, சில ஆங்கில வினாக்களுக்கு மாணவர்கள் பதில் அளிக்காதது உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகள் அடிப்படையில், சவுபாக்கியவதிக்கு மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் 2014 ல் குற்றச்சாட்டு குறிப்பாணை(சார்ஜ் மெமோ) வழங்கினார். சவுபாக்கியவதி, 'சார்ஜ் மெமோ வழங்கியதில் உள்நோக்கம் உள்ளது.




அதை ரத்து செய்ய வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவுஇவ்வழக்கைப் பொறுத்தவரை, ஆய்வின்போது எளிதான கேள்விகளுக்குக்கூட மாணவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. இது வேதனை யளிக்கிறது. மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தொடர வேண்டும்.



விசாரித்து, 4 மாதங்களில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் சிறப்புக் குழுக்களை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அமைக்க வேண்டும். அக்குழு அவ்வப்போது மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய வேண்டும்.முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூடுதல் துணைக் குழுக்கள் அமைத்து கிராமப்புறங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் கல்விக்கொள்கை அமல்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.



துவக்கக் கல்வி இயக்குனர் கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து, வினா-விடைகள் தயாரித்து சிறப்புக்குழுக்கள் மூலம் வினியோகிக்க வேண்டும். அதன் மூலம் ஆசிரியர்கள் கற்பித்தல் திறன், மாணவர்களின் கல்வியின் தரத்தை மதிப்பீடு செய்ய வேண்டும்.துவக்கப் பள்ளிகளில் மாணவர்களிடம் வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத் திறன் உள்ளதை பள்ளிக் கல்வித்துறை செயலாளர், துவக்கக் கல்வி இயக்குனர் உறுதி செய்ய வேண்டும். இதில் தவறு இருப்பதாக சிறப்புக்குழு ஆய்வில் தெரியவந்தால், தீவிரமானதாகக் கருதி சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவை பைசல் செய்கிறேன் என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜூலை-201903:21:01 IST Report Abuse
ஆப்பு ஆசிரியர்களை ஏன் டார்ச்சர் செய்யுறீங்க? மாணவர்களுக்கு போடும் இலவசங்களை நிறுத்துங்க, எட்டாவது வரை தேர்வே இல்லாம போடும் ஆல் பாஸ் முறையை ரத்து செய்யுங்க, இலவச கணிணி எல்லாம் திறமையை வளர்க்காது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X