| புளுகு மூட்டைகளின் கூடாரம் தி.மு.க., Dinamalar
புளுகு மூட்டைகளின் கூடாரம் தி.மு.க.,
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
02:33

மதுரை : ''தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்கும் தி.மு.க.,வினர் மும்மொழிக் கொள்கையை விமர்சித்து வருகின்றனர்.




புளுகு மூட்டைகளின் கூடாரமாக தி.மு.க., உள்ளது,'' என மதுரையில் பா.ஜ., தேசியச் செயலர் எச்.ராஜா கடுமையாக சாடினார்.அவர் கூறியதாவது: தேசிய கல்வி கொள்கை என்பது புதியது போல தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., தலைவர்கள் விமர்சிக்கின்றனர். 1986 முதல் தேசிய கல்வி கொள்கை நடைமுறையில் உள்ளது. தற்போது அமலிலுள்ள 1992 ஆண்டில் மாற்றப்பட்ட தேசிய கொள்கையில், தற்போதைய இன்டர்நெட், டிஜிட்டல்மயத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.



இதன்படி மத்திய, மாநில அரசுகள் ஆண்டுக்கு 20 சதவீதம் கல்விக்காக நிதி ஒதுக்க வேண்டும். மேலும் 20 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகள் ஒருங்கிணைந்த ஒரே பள்ளி வளாகத்தில் செயல்பட வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதை தவறாக புரிந்து கொண்டு பள்ளிகள் மூடப்படும் என பிரசாரம் செய்கின்றனர்.மும்மொழி கொள்கைக்கு எதிராக பேசி வரும் தி.மு.க., தலைவர்கள் சி.பி.எஸ்.இ., பள்ளிகளை நடத்துவதுடன், குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். தி.மு.க.,வினர் ஏழைகளின் எதிரிகளாக செயல்படுகின்றனர்.




புதிய கொள்கையின்படி உ.பி., ம.பி., போன்ற வட மாநிலங்களில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளை விருப்பபாடமாக எடுத்து படிக்கலாம். அதை தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்க்கிறார்களா என விளக்க வேண்டும், என்றார்.பா.ஜ., நிர்வாகிகள் சசிராமன், சிவ பிரபாகரன் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X