3 மாதங்களில் பெண் குழந்தைகளே பிறக்காத 132 கிராமங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

23 ஜூலை
2019
02:39
பதிவு செய்த நாள்
ஜூலை 23,2019 02:37

உத்தரகாசி: உத்தரகண்ட் மாநிலத்தில், 132 கிராமங்களில், கடந்த மூன்று மாதங்களில், ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து , பெண் சிசு கொலை நடப்பதை, அரசு கண்டு கொள்ளவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர், திரிவேந்திர சிங் ராவத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, உத்தரகாசி மாவட்டத்தின், 132 கிராமங்களில், மூன்று மாதங்களில், 216 குழந்தைகள் பிறந்துள்ளன. அதில், ஒரு குழந்தை கூட பெண் குழந்தை இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கலெக்டர் எச்சரிக்கை


இது குறித்து, உத்தரகாசி மாவட்ட கலெக்டர், ஆசிஷ் வுகான், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், எம்.எல்.ஏ., ராவத் பங்கேற்றார். பின், நிருபர்களிடம் பேசிய கலெக்டர், ''ஆண், பெண் விகிதம் சரிந்திருப்பது சற்று அதிர்ச்சியாக இருக்கிறது. மருத்துவ ரீதியாகவும், சிசுக்கள் கொலை செய்யப்படுகின்றனரா என்பது குறித்து, கிராமங்களில் ஆய்வு நடத்தப்படும். ''பெண் சிசு கொலை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

சமூக சேவகி கல்பனா தாக்கூர், ''இது இயல்பாக நடந்தது அல்ல. இந்த புள்ளிவிபரத்தின் மூலம், உத்தரகாசி மாவட்டத்தில், பெண் சிசு கொலை நடப்பது உறுதியாகியுள்ளது. ''அரசு நடவடிக்கை எடுக்காமல் மிக மெத்தனமாக இருக்கிறது. இனி மேலாவது அரசு அதிகாரிகள் விழித்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.


மூத்த பத்திரிகையாளர், ஷிவ் சிங் தன்வால், ''இந்த புள்ளிவிபரம் கேட்டவுடன், மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மாவட்ட நிர்வாகம் மிக விழிப்புடன் பணியாற்ற வேண்டும். ''குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர். குழந்தைகளை காப்பாற்ற, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
susainathan -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூலை-201914:19:03 IST Report Abuse
susainathan North India and west India and east India all same still no knowledge nothing but however they rules in along with south India really shocking
Rate this:
Cancel
23-ஜூலை-201913:43:06 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மார்க்கம் ஒரு ஆளுக்கு ஒரே நேரத்தில் நான்கு ஒப்பந்தம் போடலாம் என்கிறது ஆனால் இயற்கை அதற்கு எதிராக ஒருவனுக்கு ஒருத்தி என்று படைக்கிறது , அதையும் கெடுதல் எப்படி.
Rate this:
Ray - Chennai,இந்தியா
23-ஜூலை-201918:38:42 IST Report Abuse
Rayஒருவனுக்கு ஒருத்தி - சரி ஒருத்திக்கு?...
Rate this:
Cancel
23-ஜூலை-201913:41:23 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இவர்களுக்கு விழிப்புணர்வை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் , ஒன்று இவர்கள் பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும்போது யாரை மணம் முடிப்பார்கள் , அடுத்து சட்டப்படி இது குற்றம் என்றும் அதற்குரிய தண்டனை பற்றியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X