| கோபிகா எம்.எல்.ஏ., முயற்சியால் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம் Dinamalar
கோபிகா எம்.எல்.ஏ., முயற்சியால் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
02:37

கண்டமங்கலம் : திருபுவனை தொகுதியில் ஒரு மாதமாக அகற்றப்படமால் இருந்த குப்பை குவியல், எம்.எல்.ஏ., முயற்சியால் நேற்று அகற்றப்பட்டது.



திருபுவனை தொகுதியில், திருவாண்டார்கோயில், இந்திரா நகர், மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம், மதகடிப்பட்டு பாளையம், திருபுவனை பாளையம் பகுதியில் சேகரமாகும் குப்பைகளை, மண்ணாடிப்பட்டு கொம்யூன் நிர்வாகம், திருபுவனை வண்ணாங்குளத்தில் பல ஆண்டுகளாக கொட்டி வந்தனர்.திருவாண்டார்கோவில் ஏரி மற்றும் மதகடிப்பட்டு ஊரல் குளத்திலும் குப்பைகள் கொட்டப்பட்டது. வேறு பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை தங்கள் பகுதியில் கொட்டக் கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த ஒரு மாதமாக குப்பைகள் அகற்றும் பணியை கொம்யூன் நிர்வாகம் நிறுத்தியது.




இதனால், தொகுதி முழுவதும் குப்பைகள் குவிந்து கிடந்தது. குப்பைகளை அகற்ற கோபிகா, எம்.எல்.ஏ., உள்ளாட்சித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன் உத்தரவின்பேரில், மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில் பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றும் பணி நேற்று துவங்கியது. கோபிகா எம்.எல்.ஏ., பணிகளை துவக்கி வைத்தார். அகற்றப்பட்ட குப்பைகள் மதகடிப்பட்டு ஏரி பகுதியில் கொட்ட, பொதுப்பணித்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.




அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய கோபிகா எம்.எல்.ஏ, குப்பை கொட்ட நிரந்தர இடம் கிடைக்கும் வரை, தற்காலிகமாக ஏரிக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் தான் கொட்ட முடியும் என தெரிவித்தார். அதிகாரிகளின் அனுமதியுடன் குப்பைகள் கொட்டப்பட்டது.'பூட்டை உடையுங்கள்' : கோபிகா ஆவேசம்மதகடிப்பட்டு பகுதியில் நேற்று குப்பை அகற்றும் பணியை ஆய்வு செய்த, கோபிகா எம்.எல்.ஏ., மொபைல் போனில், திருவாண்டார்கோயில் பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை அங்குள்ள ஏரிப்பகுதியில் கொட்டுமாறு ஊழியர்களிடம் தெரிவித்தார்.



குப்பை வண்டி செல்ல முடியாத அளவிற்கு ஏரிக்கரை சாலையில் உள்ள கேட்டை, பொதுப்பணித்துறை ஊழியர்கள் பூட்டி வைத்துள்ளதாகவும், சாவி இளநிலை பொறியாளரிடம் இருப்பதாக தெரிவித்தனர். ஆவேசம் அடைந்த கோபிகா எம்.எல்.ஏ., 'அந்த பூட்டை உடையுங்கள்' என கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X