ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு சாப்பிட்ட 10 பேர் வாந்தி, மயக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
02:44

புதுச்சேரி : ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்த உணவு சாப்பிட்ட 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.



புதுச்சேரியில் வேலை செய்யும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் பலர், 'ஆன்லைன்' மூலம் உணவு வகைகளை ஆர்டர் செய்து, வரவழைத்து சாப்பிடுகின்றனர்.அதன்படி, புதுச்சேரி நகரப் பகுதியை சேர்ந்தவர்கள், நேற்று இரவு, ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து, வரவழைத்து சாப்பிட்டனர்.உணவை சாப்பிட்ட 10 பேருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.



இதையடுத்து 10 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த, உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு (புட்செல்) போலீசார், உணவு வகைகளை டெலிவரி செய்த தனியார் நிறுவனத்திடம் விசாரித்தனர். அவர்கள், தட்டாஞ்சாவடியில் உள்ள ஒரு ஓட்டலில் அந்த உணவை வாங்கியதாக தெரிவித்தனர்.போலீசார், சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளரை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
24-ஜூலை-201918:20:53 IST Report Abuse
venkatan உணவு உயிரினங்களின் ஜீவாதார உரிமை.அதுவும் காசு வாங்கி உணவு அளிப்பது நுகர்வோரின் அதீத உரிமை.இப்படி இருக்க உணவு மூலப்பொருள் தயாரிப்பு,பரிமாற்றம், உபகரணங்கள்,உண்ணும் இடம்சுற்றுப்புறம், நிறைவான கடைசி நிலை உண்போர் என பல நிலைகளில் எதற்கும் சமரசம் கூடாது. தார்மீக நிலையிலும் மாசடைந்த உணவு வழங்கல் மகா பாபம்.கடுமையான தண்டனை அவசியம்.இதிலும் அரசியல், லஞ்சம் போன்ற பாவங்களுக்கு விமோசனமே இல்லை.சம்பந்த பட்டவர்கள் சிந்திக்கலாமே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X