வரத்துக்கால்வாயில் குப்பையை கொட்டுவதால் பாதிப்பு! மாடக்குளம் கண்மாய்க்கு நீர்வரத்து இல்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
03:51

மதுரை : மதுரையின் நீர் ஆதாரமான மாடக்குளம் கண்மாய் வரத்துக் கால்வாய்களில் குப்பையை தொடர்ந்து கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், நீர்வரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இக்கண்மாயில் குடிமராமத்து பணிகள் விவசாயிகளின் பங்களிப்பு நிதியுடன் 87 லட்சம் ரூபாயில் நடக்கிறது. பெரியாறு வைகை அணைகளின் உபரி நீர் கண்மாய்க்கு வரும். இதற்காக கொடிமங்கலம் - மாடக்குளம் இடையே 12.3 கிலோ மீட்டர் துாரத்திற்கு அச்சம்பத்து வழியாக வரத்து கால்வாய் உள்ளது. இதில் 2 கி.மீ., துாரத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் பராமரிப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10.3 கி.மீ., துாரத்திற்கு பராமரிப்பு பணி நடக்கவுள்ளது.இந்நிலையில் அச்சம்பத்து, டி.கே.தங்கமணி நகர் வழியாக வரும் வரத்து கால்வாய்களில் அருகில் குடியிருப்போர் தொடர்ந்து குப்பையை கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் மழை நீர் கண்மாய்க்கு செல்ல வழியின்றி கால்வாயில் குப்பையால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு பொதுப்பணித் துறை சார்பில் பலமுறை கடிதம் எழுதியும் பயனில்லை. குப்பையை கொட்டுவதை தடுத்து மழை நீர் கண்மாய்க்கு வர கலெக்டர் ராஜசேகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Diya -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-201900:27:54 IST Report Abuse
Diya People who do not know where to dispose the waste do not know the difference between the waste and the food they eat. At the same time, this seems to be a long time complaint, it shows we do not have a proper waste disposal management.
Rate this:
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜூலை-201916:46:17 IST Report Abuse
RM Kirithumal river near ellisnagar housing board,madura college are full of waste and drainage water thrown by people nearby. Awareness should be made among people to keep the rivers ,lakes etc., clean .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X