பரவாயில்லையே! பகிர்மான கால்வாய் தூர்வாரும் பணி ஜரூர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

24 ஜூலை
2019
02:04
பதிவு செய்த நாள்
ஜூலை 23,2019 23:26

திருப்பூர்:நீண்ட நாட்களுக்கு பிறகு, பொங்கலுாரில் இருந்து இச்சிப்பட்டி வரை செல்லும், பிரதான பகிர்மான கால்வாய் துார்வாரும் பணி, ஜரூராக நடக்கிறது.தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தில், பி.ஏ.பி., பாசன வாய்க்கால் துார்வாரி சுத்தம் செய்யும் பணிகள், 15 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கியுள்ளது. இதன்மூலம், பாசன சங்கங்களுக்கு உட்பட்ட பாசன வாய்க்கால்கள், நீண்ட காலத்துக்கு பின் துார்வாரப்படுகின்றன.


திருப்பூர் சுற்றுப்புற வட்டாரத்தில், வீரபாண்டி, பல்லடம், பூமலுார், நாரணாபுரம், மங்கலம், இச்சிப்பட்டி கிராம பாசன சபைகளுக்கு உட்பட்ட, 10 ஏக்கர் நிலங்கள், பி.ஏ.பி., திட்டத்தில் பயன்பெறுகின்றன. பொங்கலுாரில் இருந்து பிரியும், பிரதான பகிர்மான கால்வாய், இவ்வழியாக சென்று, இச்சிப்பட்டி வரை செல்கிறது.பிரதான வாய்க்காலில் இருந்து, பாசன சங்க எல்லைகளுக்கு, கிளை வாய்க்கால் மூலம் தண்ணீர் செல்கிறது.


பொங்கலுாரில் இருந்து வரும், பிரதான பகிர்மான கால்வாய், 17 கி.மீ., துாரம் செல்கிறது. மேடு, பள்ளமான பகுதி களை கடந்து செல்வதால், பிரதான கால்வாய், இரண்டு கி.மீ., துாரம், 30 முதல், 40 அடி ஆழத்துடன் செல்கிறது.மிக ஆழமான வாய்க்கால் என்பதால், இதுவரை முழுமையாக துார்வாரி சுத்தம் செய்யப்படவில்லை.குறைந்தது, ஐந்து அடி உயரத்துக்கு மண் பரவிக்கிடந்தது. இதனால், கடைமடை பகுதிக்கு, தண்ணீர் செல்வது தடைபட்டது. பல ஆண்டுகளாக, கடைமடைக்கு தண்ணீர் கிடைக்கவே இல்லை.விவசாயிகள் வலியுறுத்தியபடி, குடிமராமத்து திட்டத்தில், பிரதான பகிர்மான கால்வாய் துார்வாரும் பணி துவங்கப்பட்டுள்ளது.வாய்க்காலுக்கும் 'பொக்லைன்' இறங்கி, துார்வாரும் பணி ஜரூராக நடந்து வருகிறது.
பாசன சங்க நிர்வாகிகள் பொன்னுசாமி, ஈஸ்வரன், விவசாயிகள், பி.ஏ.பி., திட்ட அதிகாரிகள் பங்கேற்று, நேற்று பணிகளை பார்வையிட்டனர்.விவசாயிகள் கூறுகையில், 'ஏறத்தாழ, 44 ஆண்டுகளுக்கு முன், பிரதான கால்வாய் துார்வாரப்பட்டது. அதற்கு பிறகு, முழுமையாக சுத்தம் செய்யாததால், கடைமடைக்கு தண்ணீர் கிடைக்கவே இல்லை.தற்போது, குடிமராமத்து திட்டத்தில் துார்வாரி சுத்தம் செய்வதால், மேலும், 30 ஆண்டுகளுக்கு, தடையின்றி பாசன நீர் கிடைக்கும். குடிமராமத்து திட்டத்தை, தொடர்ந்து செயல்படுத்தினால், விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர்,' என்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
25-ஜூலை-201918:29:09 IST Report Abuse
SENTHIL NATHAN 'விதை போட்டு, நாற்று உருவாக்கி, மரம் வளர்த்தா, எந்த காலத்துல நடக்கிறது...' என, வேகமா வளர்க்கிற வழியை கண்டுபிடித்து, கிராம சாலை ஓரங்களில், நிறைய மரங்களை நட்டு வருகிறார், அர்ஜுனன். இது குறித்து அர்ஜுனன் கூறியதாவது : சாக்கு பையில், செம்மண் மற்றும் மணலோடு, இயற்கை உரமான மக்கிய குப்பைகளை கலந்து, தண்ணீர் ஊற்றி ஊற விடுவேன். ஆல மரம், அரச மரம், பூவரசு, அத்தி மரம், வாகை மடக்கி போன்ற மரங்களின், 6 அடி உயரமுள்ள கிளையை வெட்டி, அதில் நடுவேன். 14வது நாள் துளிர் விடும் 30வது நாளில் இலைகள் துளிர்த்து, 70வது நாள், மரமாக நட, தயாராகி விடும். ஆடு, மாடு , அவற்றின் நாற்றை தின்றுவிடும் வெயிலில் காய்ந்து விடும் என்ற கவலையின்றி, 'பாஸ்ட் புட்' மாதிரி, 'பாஸ்ட் ட்ரீ' தயார். அரசு உதவிக்கரம் நீட்டினால், சென்னை முதல் குமரி வரையிலான, நாற்கர சாலையில், 20 மீ., இடைவெளியில், 700 கி.மீ., துாரத்துக்கு, 35 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டால், மினி காட்டினுள், தமிழகமே, 'ஏசி'க்குள் இருக்கும். செடி நட்டு, மரமாக வளர, ஆண்டு கணக்காகும். விதை போட்டு, மூன்று ஆண்டுகளாக மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு பதிலாக, கிளைகளை வெட்டி நட்டால், 90 நாட்களிலேயே மரமாக வளர்க்கலாம். இவ்வாறு நட்ட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள், திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரத்தை சுற்றி உள்ளன. இதை, என் சொந்த செலவிலேயே செய்தேன். மேலும், எங்கள் ஊர், குளக்கரையை சுற்றிலும் பனங்கொட்டைகளை விதைத்து வைத்தேன். தற்போது, 2,000 பனைகள் குருத்து விட ஆரம்பித்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கோவில்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, 27 ஆயிரம் மரக்கன்றுகளை, இலவசமாக வழங்கியுள்ளேன். 90 நாட்களில், மரம் வளர... சிமென்ட் கோணி பையில், மண் நிரப்பி, வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற, தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த மரங்களின் நடுத்தர அளவு கிளையை, 6 அடி நீளத்தில் வெட்டி, பச்சை தன்மை மாறுவதற்குள் நட வேண்டும் கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்த அளவு நீர் ஊற்றி வளர்க்க வேண்டும் நட்ட கிளைகளை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. 30 நாட்களில் துளிர் விடும், இலைகள் துளிர்த்ததும், கால்நடைகள் மேயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பராமரித்தால், 90 நாட்களில், நிழல் தரும் அளவுக்கு மரம் வளர்ந்து விடும். கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு, 1,000 மரங்கள் வரை இலவசமாக நட்டு, தனி நபர்களுக்கு பயிற்சி தரவும் தயாராக உள்ளேன். அர்ஜுனனுடன் பேச, 97903 95796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சி. பி. செந்தில்குமார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X