| ஆசிய யோகா போட்டிக்கு திருப்பூர் மாணவி தேர்வு Dinamalar
ஆசிய யோகா போட்டிக்கு திருப்பூர் மாணவி தேர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
23:32

திருப்பூர்:திருப்பூர், சின்னாண்டிபாளையம், பிளாட்டோஸ் அகாடமி பள்ளி மாணவி ஆசிய யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.திருப்பூர், காந்திநகர், ரோட்டரி அரங்கில் மாநில அளவிலான, 'ஓப்பன் யோகா சாம்பியன்' போட்டி கடந்த, 21ம் தேதி நடந்தது. இதில், பிளாட்டோஸ் அகாடமி பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவி ஸ்ரீநிதி வெற்றி பெற்று அசத்தினார். அத்துடன், தாய்லாந்தில் நடக்கவுள்ள, 'ஆசிய யோகா சாம்பியன்ஷிப்' போட்டிக்கும் தேர்வாகியுள்ளார். சர்வதேச அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவி ஸ்ரீநிதியை, பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன், ஆசிரியர்கள், பெற்றோர் வாழ்த்து தெரிவித்து, பாராட்டினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X