'ஹைடெக்' மொய் விருந்து விழா: ஒருவருக்கு ரூ. 4.5 கோடி கிடைத்தது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2019
07:13

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே நடந்த மொய் விருந்தில் ஒருவருக்கு 4.5 கோடி ரூபாய் வசூலானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் வங்கி சேவை 'சிசிடிவி' என மொய் விருந்து விழா 'ஹைடெக்' தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு கொத்தமங்கலம் கீரமங்கலம் ஆலங்குடி உட்பட இதர பகுதிகளில் ஆனி ஆடி ஆவணி மாதங்களில் மொய் விருந்து விழா களைகட்டும். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பவரை மீட்கும் வகையில் நடத்தப்பட்ட மொய் விருந்து காலப்போக்கில் கவுரவப் பிரச்னையாக மாறியது. புதுக்கோட்டை வடகாடு பகுதியில் 'முகிலன் பிளக்ஸ்' கிருஷ்ணமூர்த்தி என்பவர் நேற்று மொய் விருந்து நடத்தினார். இதில் இதுவரை எந்த மொய் விருந்திலும் வசூல் ஆகாத அளவுக்கு 4.5 கோடி ரூபாய் கிடைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் மொய் விருந்து விழா நடத்தி 3 கோடி ரூபாய் வசூலித்ததே சாதனையாக இருந்தது. அதை தற்போது அவரே முறியடித்துள்ளார். இந்த மொய் விருந்தில் அதிகளவில் பணம் வசூலாகும் என்பதால் பணம் வாங்கவும் கள்ள நோட்டுகள் தடுக்கவும் ஆலங்குடி ஐ.டி.பி.ஐ. வங்கி சார்பாக உதவி மையம் செயல்பட்டது. மேலும் சமையல் கூடம் உட்பட எட்டு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டிருந்தன. நேற்றைய மொய் விருந்தில் 9000க்கும் மேற்பட்டோர் கறிவிருந்து சாப்பிட்டுள்ளனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Iyer - Tirunelveli,இந்தியா
26-ஜூலை-201908:36:38 IST Report Abuse
Bala Iyer எதோ நெருடுகிறது. எங்கயோ தவறுகளும் குற்றங்களும் உள்ளன போல ஒரு நமைச்சல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X