வாய்க்காலில் குப்பை கொட்டியதால் ஆவேசம்: இனி, இப்படித்தான்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

28 ஜூலை
2019
08:08
பதிவு செய்த நாள்
ஜூலை 27,2019 23:35

திருப்பூர்:திருப்பூர் அருகே, வாய்க்காலில் குப்பை கொட்டிய நிறுவனத்துக்குள் அதே குப்பையை மீண்டும் கொட்டி விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



திருப்பூரை அடுத்த மாணிக்காபுரத்தில், 140 ஏக்கர் பரப்பளவுள்ள குளம் உள்ளது. மாணிக்காபுரம் குளத்து நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், இந்த வாய்க்கால் முழுவதும் துார் வாரி சுத்தம் செய்யும் பணி கடந்த 10 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த வாய்க்காலில், பொன்னாபுரம் பகுதியில் கரையோரம் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் பிரின்டிங் நிறுவன விடுதியின் உணவு சமைக்கும் பகுதி மற்றும் சலவை செய்யும் பகுதி, இந்த வாய்க்காலின் கரையோரம் உள்ளது.




இவற்றிலிருந்து வெளியேறும் கழிவுகள், விடுதியிலிருந்து வீசப்படும் குப்பை ஆகியன குவியல் குவியலாக வாய்க்காலில் கொண்டு வந்து நீண்ட காலமாக கொட்டப்படுகிறது.வாய்க்கால் துார் வாரும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இது குறித்து நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும், இதை நிறுத்தாமல் நேற்று காலை வரை அங்கு குப்பை கொட்டப்பட்டது.வாய்க்கால் துார் வாரும் பணியில் இந்த இடத்தை சுத்தம் செய்த போது, அப்பகுதியில் விடுதியிலிருந்து கொட்டப்பட்ட சாம்பல் மற்றும் குப்பை கழிவுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி, அதே வளாகத்துக்குள் கொட்டப்பட்டது.




விவசாயிகள் கூறியதாவது:வாய்க்காலில் அடைப்பு ஏற்பட இது முக்கிய காரணமாக உள்ளது. பல முறை அறிவுறுத்தியும், விடுதி நிர்வாகம் எதையும் கண்டுகொள்ளவில்லை. நீர் வழித்தடத்தை தடை செய்த குப்பைகளை அது புறப்பட்டு வந்த இடத்துக்கே மீண்டும் அனுப்பினோம். இது நீர் நிலைகளை அசுத்தம் செய்வோருக்கு ஒரு பாடமாக இருக்கும். வாய்க்கால் துார் வாரும் பணியின் போது, விவசாயிகள் உடனிருந்து, வாய்க்காலில் குப்பைகளை கொட்ட வந்தவர்களை அறிவுரை கூறி திருப்பி அனுப்பினோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
seenivasan - singapore,சிங்கப்பூர்
03-ஆக-201914:20:30 IST Report Abuse
seenivasan அந்த குப்பையை மூட்டையில் கட்டி அந்த கம்பெனியின் சமையல் செய்யும் இடத்தில் வைத்திருக்க வேண்டும். கூமுட்டைகள்... இவர்கள் கற்ற கல்வியில் தீ வைக்க.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
02-ஆக-201903:23:34 IST Report Abuse
 nicolethomson அவனுங்க தலையில் கொட்டியிருக்க வேண்டும்
Rate this:
Cancel
Narayan - chennai,இந்தியா
01-ஆக-201913:30:13 IST Report Abuse
Narayan சரியான பாடம் இதே மாதிரி தமிழ் நாடு முழுவதும் குப்பையை கண்ட இடங்களில் கொட்டுவர்களுக்குகும் பாடம் படிப்பிக்க எல்லாரும் முன் வந்தால் தமிழ் நாடு வெகு சீக்கரம் சுத்தமாகிவிடும் தண்ணீரும் தங்கி கொசுக்கள் வராது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X