அரசு பள்ளியில் இருளில் தவித்த மாணவர்கள் எம்.எல்.ஏ., நடவடிக்கையால் 'வெளிச்சம்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2019
23:59

புதுச்சேரி, அரசு பள்ளியில் மின்சாரம் இல்லாமல் இருளில் வகுப்புகள் நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த எம்.எல்.ஏ., சாமிநாதன், தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி, நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.லாஸ்பேட்டையில், வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு தொழில்நுட்ப மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஐந்து நாட்களுக்கு முன் திடீரென மின்சாரம் நின்றது. இதுகுறித்து, மின்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மின்துறை ஊழியர்கள் உடனடியாக பள்ளிக்கு வந்து பார்வையிட்டனர். பூமிக்கடியில் செல்லும் மின்சார கேபிளில் பழுது ஏற்பட்டுள்ளது. புதிய கேபிள் பதிக்க வேண்டும்; ஆனால், கேபிள் வாங்குவதற்கு பணம் இல்லை என கூறிவிட்டு சென்று விட்டனர்.மின்சார வினியோகம் இல்லாததால், பள்ளியில் வகுப்பறைகளும், தொழிற்பயிற்சி கூடங்களும் இருளில் மூழ்கின. கடந்த ஐந்து நாட்களாக மாணவர்கள் இருளில் அமர்ந்து பாடம் படித்து வந்தனர். மேலும், செய்முறை பயிற்சி மேற்கொள்ள முடியாமலும் சிக்கல் ஏற்பட்டது.இதனை அறிந்த சாமிநாதன் எம்.எல்.ஏ., நேற்று முன்தினம் நேரடியாக பள்ளிக்கு சென்று, பள்ளியின் துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் விபரங்களை கேட்டறிந்தார். பின்னர், தலைமைச் செயலர் அஸ்வனிக்குமாரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிவித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைகளில் இருந்து கழிவு நீர் வெளியேறி கொண்டிருந்தது. பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் மகாலிங்கத்தை தொடர்பு கொண்டு பேசிய சாமிநாதன், கழிப்பறையை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.சாமிநாதன் எம்.எல்.ஏ., கூறும்போது, 'வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு தொழில்நுட்ப பள்ளியில் இருளில் அமர்ந்து மாணவர்கள் படிப்பது குறித்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். தேவையான அளவுக்கு கேபிளை உடனடியாக எடுத்து வந்து பழுது நீக்கும் பணியை மின்துறையினர் துவக்கி விட்டனர்.அதுபோல, கழிவறையில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதை சரி செய்வதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். மாணவர்களின் நலன் காக்கப்பட வேண்டும்' என்றார். லாஸ்பேட்டை தொகுதி பா.ஜ., தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X