வட்ட அளவில் ஹேண்ட்பால் போட்டி பாரதிதாசன் அரசு பள்ளி வெற்றி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2019
02:27

நெட்டப்பாக்கம்:கல்வித்துறை சார்பில், வட்டம் நான்கு அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான ஹேண்ட் பால் போட்டி கல்மண்டபம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது.



போட்டியை பள்ளி தலைமையாசிரியர் தனசேகரன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகன் வரவேற்றார். போட்டியின் நடுவர்களாக திருமாவளவன், சித்தானந்தம், கருணைபிரகாசம், அலெக்ஸ் ஆகியோர் செயல்பட்டனர்.போட்டியில், வில்லியனுார் விவேகானந்தா அரசு மேல்நிலைப் பள்ளி, நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி, பி.எஸ்.பாளையம் பாவேந்தர் பாராதிதாசன் மேல்நிலைப் பள்ளி, உருவையாறு ஆச்சார்யா மேல்நிலைப்பள்ளி, பொறையூர் ஆதித்யா வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி, கூடப்பாக்கம் ஜவகர் மேல்நிலைப் பள்ளி, லிங்காரெட்டிப்பாளையம் பான்கோஸ் மேல்நிலைப் பள்ளி அணிகள் பங்கேற்றன.போட்டி சீனியர், ஜூனியர் பிரிவுகளில் நடந்தது.சீனியர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில், நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி, பி.எஸ்.பாளையம் பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மோதின, அதில் வெற்றி பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளி அணிக்கு தலைமையாசிரியர் தனசேகரன் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.விளையாட்டு குழு செயலர் ரகு நன்றி கூறினார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X