குப்பை கிடங்கில் தேங்கியுள்ள இயற்கை உரம் 10,500 டன் மலிவு விலையில் விற்றும் வாங்க ஆளில்லை.
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
01:13

மதுரை, : மதுரை மாநகராட்சி வெள்ளக்கல் குப்பை கிடங்கில் தயாரிக்கப்படும் இயற்கை உரம் மலிவு விலையில் விற்கப்பட்டும் விழிப்புணர்வு இன்றி வாங்க ஆளில்லாமல் 10 ஆயிரத்து 500 டன் அளவு குவிந்துள்ளது.மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில் தினமும் சேரும் 630 டன் குப்பை, இக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது. மக்காத குப்பை மறுசுழற்சிக்கும், மக்கும் குப்பை உரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஏழு ஆண்டுகளாக உரம் தயாரிக்கும் மையம் செயல்படுகிறது. நவீன இயந்திரங்கள் மூலம் மக்கும் குப்பை துகள்களாக அரைக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது.இந்த உரத்திற்கு வேளாண் பல்கலை அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஒரு கிலோ 2 ரூபாய் 50 பைசாவிற்கு விற்கப்படுகிறது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உரம் ஒரு கிலோ 3 ரூபாய். 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி செலுத்த வேண்டும்.இந்த உரம் அனைத்து வித பயிர்களுக்கும் ஏற்றது. ஆனால் விழிப்புணர்வு இல்லாததால் உரம் வாங்கும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் மையத்தில் மலைபோல் உரம் தேங்கியுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தென்னை, மா, பலா, வாழை, ரப்பர், காபி, தேயிலை, கொய்யா மற்றும் கத்தரி, தக்காளி, வெண்டை போன்ற அனைத்து வகை பயிர்களுக்கும் இந்த உரத்தை பயன்படுத்தலாம். மலிவு விலையில் விற்கப்படுகிறது. இந்த இயற்கை உரத்தால் பலன் பெற்ற விவசாயிகள் அடிக்கடி வருகின்றனர். விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாரம் இருமுறை கிராமங்களுக்கு நேரடியாக வாகனத்தில் கொண்டு சென்று விற்கிறோம் என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasanthan - Moscow,ரஷ்யா
13-ஆக-201908:47:21 IST Report Abuse
vasanthan சுடலை கூட்டம் ஆட்சியில் இருந்து இருந்தால் மொத்த உரமும் காணாமல் போயிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
13-ஆக-201906:15:47 IST Report Abuse
vasumathi இங்கு இருப்பது போல பாக்கெட்டுகளில் போட்டு தோட்ட மண் உரமாக நகர மக்களுக்கும் விற்று பாருங்கள். ரோஜா கத்திரிக்கா என்று அனைத்துக்கும் மார்க்கெட் / சந்தை இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X