தாம்பரம் - செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதை பணி 'ஜவ்...வு!': மூன்று ஆண்டுகளாகியும் 30 சதவீதம் கூட முடியவில்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

13 ஆக
2019
10:38
பதிவு செய்த நாள்
ஆக 13,2019 04:13

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, மூன்றாவது அகல ரயில் பாதை அமைக்கும் பணி, மந்த கதியில் நடக்கிறது. நிதி ஒதுக்கீடு தாமதம், முறையான கண்காணிப்பில்லாதது ஆகிய காரணங்களால், ஒன்றரை ஆண்டுகளில் முடிய வேண்டிய பணி, ஐந்து ஆண்டுகளை கடந்தும் இழுவையாக இருக்கிறது.



கடற்கரை - தாம்பரம் இடையே, நான்கு ரயில் பாதைகள் உள்ளன. இதில், இரண்டு பாதைகள், மின்சார ரயில் போக்குவரத்திற்கும், இரண்டு பாதைகள், எக்ஸ்பிரஸ் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன.தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, இரண்டு ரயில் பாதைகள் மட்டுமே, தற்போது உள்ளன. இந்த வழித்தடத்தில் உள்ள பகுதிகள், சென்னை நகருக்கு இணையான வளர்ச்சியை பெற்று வருகின்றன.இதனால், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, கூடுதல் மின்சார ரயில்களை இயக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 11 நிலையங்கள்ஆனால், இரண்டு ரயில் பாதைகள் மட்டுமே இருப்பதால், எக்ஸ்பிரஸ் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், குறிப்பிட்ட இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.எதிர்கால போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 256 கோடி ரூபாய் செலவில், 30 கி.மீ., துாரத்திற்கு, மூன்றாவது அகல ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக, 2016 பிப்., 7ல், தாம்பரத்தில் நடந்த விழாவில், அப்போதைய ரயில்வே அமைச்சர், சுரேஷ்பிரபு, மூன்றாவது ரயில் பாதை பணியை துவக்கி வைத்தார்.



இப்பாதை பணி ஒன்றரை ஆண்டுகளில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பணிகள் மந்த கதியில் நடந்து வருவதால், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்னும் பணி முடியவில்லை.இப்பாதையில், தாம்பரம், பெருங்களத்துார், வண்டலுார், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்ககொளத்துார், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், பரனுார், செங்கல்பட்டு என, 11 நிலையங்கள் உள்ளன.இதில், தாம்பரம், பெருங்களத்துார், வண்டலுார், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி இடையே, மூன்றாவது பாதைக்கு, மண் நிரப்பும் பணி, முழுவதுமாக முடியவில்லை.சில இடங்களில், 100 மீட்டர், 200 மீட்டர் இடைவெளியில், மண் கொட்டப்படவே இல்லை. கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்கொளத்துார், மறைமலை நகர், சிங்கப்பெருமாள் கோவில் வரை, மூன்றாவது பாதைக்கு மண் நிரப்பப்பட்டுள்ளது.ரூ.52 கோடிசிங்கப்பெருமாள் கோவில் - பரனுார் இடையே உள்ள, பாதைக்கு, மண் நிரப்பும் பணி, பாதி அளவு முடிந்துள்ளது. பரனுார் - செங்கல்பட்டு இடையே, பணி ஏதும் நடக்கவில்லை



.கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்கொளத்துார், சிங்கப்பெருமாள் கோவில் நிலையங்களில், மூன்றாவது பாதைக்கு, ஜல்லி நிரப்பப்பட்டு, தண்டவாளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.பிளாட்பாரம் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன. கூடுவாஞ்சேரி, பொத்தேரி நிலையங்களில், சிக்னல் கேபிள்கள் பதிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.இப்பாதையில், 74 சிறிய பாலங்கள் உள்ளன. இதில், 62 பாலங்கள் கட்டும் பணி முடிந்துள்ளது. மீதமுள்ள, 12 பாலங்கள் கட்டும் பணி, தற்போது நடந்து வருகிறது. இப்பாதையில், ஊரப்பாக்கம் - கூடுவாஞ்சேரி இடையே, ஐந்து கண் பாலம் நீட்டிப்பு பணியில், சிமென்ட் துாண்கள் கட்டப்பட்டு வருகின்றன.பரனுார் ரயில் நிலையம் அருகே, கொளவாய் ஏரியில், பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பாதையில், இரண்டு பெரிய பாலங்கள் உள்ளன.ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள, இரும்புலியூர் ரயில்வே பாலம், செங்கல்பட்டு - பரனுார் அருகே, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள ரயில்வே பாலம், 52 கோடி ரூபாய் செலவில், புதிதாக கட்டப்பட உள்ளன.திட்டம்ஐந்து மாதங்களாக பணி நடந்தாலும், தற்போது தான், கான்கிரீட் துாண்கள் அமைக்கும் பணி நடக்கிறது.


இப்பாதைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஏற்பட்ட தாமதத்தால், பாதை பணியில் தொய்வு ஏற்பட்டுஉள்ளது.தற்போது, தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெரிய பாலங்கள் பணியை தவிர, மற்ற பணிகள், 2020 மார்ச்சில் முடிக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது. இரும்புலியூர் மற்றும் பரனுார் பெரிய பாலப்பணியை முடிக்க, இன்னும் ஓராண்டிற்கு மேல் ஆகும். இப்பாலங்கள் கட்டுமான பணி முடிந்ததும், 2020 செப்டம்பரில், மூன்றாவது பாதையில், ரயில் போக்குவரத்து துவக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.ஆனால், பணிகள் நடக்கும் வேகத்தை பார்த்தால், தாம்பரம் - செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதை பயன்பாட்டிற்கு வர, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்றே தெரிகிறது.


செங்கல்பட்டு பயணியர் கோரிக்கை!


கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் புறநகர் மின்சார ரயில்களில், பயணியர் நெருக்கடி அதிகம் உள்ளது. 2018 ஜூலையில், திருமால்பூர் ரயிலில், கூட்ட நெருக்கடியால், படியில் தொங்கியபடி பயணம் செய்த ஐந்து பயணியர், பரங்கிமலை நிலையத்தில், பிளாட்பார தடுப்பு சுவரில் மோதி இறந்தனர். இம்மாதம், செங்கல்பட்டு ரயிலில் பயணம் செய்த மூன்று ஆண்கள், தாம்பரம் அருகே மின் கம்பத்தில் மோதி விழுந்ததில், ஒருவர் பலியானார்.இருவர் படுகாயமடைந்தனர். கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டிருந்தால், இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது.மூன்றாவது பாதை அமைக்கும் பணி, இனியும் தாமதமாகாமல், போர்க்கால அடிப்படையில், விரைவாக முடிக்கப்பட்டால் மட்டுமே, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, ரயில் போக்குவரத்து அதிகமாகும் என, செங்கல்பட்டு ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
13-ஆக-201911:44:54 IST Report Abuse
Rameeparithi வரும்படி இல்லை என்பதால் சுடாலின் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை வரும் சட்டசபை தேர்தலில் வாக்குறுதி கொடுத்து ஜமாய்ப்பார்
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-ஆக-201905:43:37 IST Report Abuse
Sanny வருங்கால சந்ததியினருக்கு வசதிக்காக சந்திராயன் அனுப்ப பணம் இருக்கு, இப்போ வாழும் மக்களின் வசதிக்கு செலவு செய்ய பணம் இல்லையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X