போலீஸ் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2019
01:34

பெண் விரல்களை வெட்டிய கும்பல்


மதுரை: மீனாம்பிகை நகர் கம்பர் தெரு செந்தில் மனைவி தமிழ்ச்செல்வி 35. இவர் அப்பளக் கம்பெனி நடத்தி வருகிறார். அங்கு வேலை செய்யும் முத்துக்குமார், ரோமி உட்பட நான்கு பேரை நேற்று முன்தினம் முகமூடி அணிந்த எட்டு பேர் தாக்கினர். செந்தில், தமிழ்ச்செல்வி தட்டிக்கேட்டனர். கும்பலை சேர்ந்த ஒருவரை தமிழ்ச்செல்வியின் வளர்ப்பு நாய் கவ்வியது.நாயை கும்பல் தாக்கியதில் சம்பவ இடத்தில் பலியானது. தமிழ்ச்செல்வியின் இடது கை விரல்களை வெட்டி துண்டாக்கியும், வாகனங்களை சேதப்படுத்தியும் விட்டு கும்பல் தப்பியது. இவ்வழக்கில் ஜெய்ஹிந்த்புரம் விஜய் 22, ஹரி 19, பிரவீன் பாலா, 18, சிவா 19, ஜாஹீர் உசேன் 19, மற்றும் 17 வயது சிறுவர் இருவரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர்.



வாலிபருக்கு கத்திக்குத்து


மதுரை: யாகப்பா நகர் பாலகிருஷ்ணன் மகன் யோகேஸ்வர் 23. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்துவுக்கும் 25, விரோதம் உள்ளது. ஆக.,11 அண்ணாநகர் ரோட்டில் சென்ற யோகேஸ்வரனை கத்தியால் மாரிமுத்து குத்தி விட்டு தப்பினார். அண்ணாநகர் போலீசார் விவரிக்கின்றனர்.திருமணம் தாமதம்; வாலிபர் தற்கொலைமதுரை: ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு திருத்துவராஜ் மகன் கார்த்திக் 26. இவருக்கு திருமணம் முடிக்க பெற்றோர் பெண் பார்த்தனர். தாமதம் ஆனதால் மனம் உடைந்த கார்த்திக் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடையில் திருட்டுமதுரை: துவரிமானை சேர்ந்தவர் ஜெகன் 39. இவர் பேச்சியம்மன்படித்துறையில் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். ஆக.,11 இரவு கடை கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 18 ஆயிரம்ரூபாய் உட்பட 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கார் உதிரி பாகங்களை திருடி தப்பினர். திலகர்திடல் போலீசார் விசாரிக்கின்றனர்.



கஞ்சா விற்றவர் கைது



பேரையூர்: சேடபட்டி எஸ்.ஐ., பாலுச்சாமி மற்றும் போலீசார் சின்னக்கட்டளையில் ரோந்து சென்றனர். அங்கு அதே ஊரை சேர்ந்த ராமர் 50, வீட்டின் பின்புறம் விற்க ஒரு கிலோ 500 கிராம் கஞ்சா வைத்திருந்தார். ராமரை கைது செய்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.



வரதட்சணை: ராணுவ அதிகாரி மீது வழக்கு



திருமங்கலம்: பேரையூர் பி.அம்மாபட்டி வெற்றிவேல்.இவரது மனைவி பூமாதேவி 39. வெற்றிவேல் பெங்களூருவில் ராணுவத்தில் பணி செய்கிறார். பூமாதேவி சென்னை ஆதம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசில்இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு லஞ்ச புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வெற்றிவேல், பூமாதேவி திருமணம் 2011ல் நடந்தது. திருமணத்தின் போது 60 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் ஐந்தாண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். சில மாதங்களுக்கு முன் வெற்றிவேல் வேறு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். இதுகுறித்து பூமாதேவி திருமங்கலம்மகளிர் போலீசில் புகார் செய்தார். வெற்றிவேல், அவரது தந்தை பழனிசாமி, சகோதரி முத்துலட்சுமி, அவரது கணவர் கண்ணன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து எஸ்.ஐ., சியாமளாதேவி விசாரிக்கிறார்.


கோயில் ஊழியருக்கு மிரட்டல்


திருமங்கலம்: இங்குள்ள மீனாட்சி அம்மன் கோயில் தற்காலிக ஊழியர் தண்டபாணி 30. கோயில் வாயிலில்தேங்காய் பழ கடை நடத்தி வருபவர் முருகேசன் 45. இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. இரு நாட்களுக்கு முன் கோயில் அருகில் நின்ற தண்டபாணியை கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல்விடுத்ததாக முருகேசன் மீது வழக்கு பதிந்து திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X