| கண்மாய் ஆக்கிரமிப்பு Dinamalar
கண்மாய் ஆக்கிரமிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஆக
2019
01:35

மதுரை, ஆக.14-

மதுரை மாவட்டம் எஸ்.பெருமாள்கோவில்பட்டி தெய்வம்.இவர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில்தாக்கல் செய்த பொது நல மனு: மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள ஒரு கண்மாயில் குறிப்பிட்ட அளவு நிலத்தை, 'குரூப் ஆப் டெம்பிள் சிட்டி' ஓட்டல் நிர்வாகம்ஆக்கிரமித்துள்ளது.மதுரை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், பொதுப்பணித்துறை செயற்பொறியளருக்கு புகார் அனுப்பினேன். ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனு செய்தார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு: சம்பந்தப்பட்ட இடம் எந்த துறைக்கு சொந்தமானது என எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தரப்பிற்கு தெரியவில்லை.சம்பந்தப்பட்ட துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருவர் மாற்றி, ஒருவர் கூறுகின்றனர். பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் ஆக.,22ல் இந்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X