c.b.c.i.d must investigate student aparna murder case | மாணவி அபர்ணா கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்கணும்: கம்யூ., Dinamalar
மாணவி அபர்ணா கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்கணும்: கம்யூ.,
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 மே
2011
01:36

புதுக்கோட்டை: "புதுக்கோட்டையில் நடந்த மாணவி அபர்ணா படுகொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றவேண்டும்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் உறுப்பினர் சங்கர் தலைமையில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் லாசர், மாவட்டச் செயலாளர் சின்னத்துரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செபஸ்தியான், செல்வராஜ், பிரவாகன், உடையப்பன், முத்துராமலிங்கம், கவிவர்மன் உட்பட பலர் பங்கேற்றனர். புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைக்குமார், சந்தைப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை ராஜம் தம்பதியரின் மகள் அபர்ணா(14). இவர் வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு படித்துவந்தார். கடந்த மார்ச் 9ம் தேதி பெற்றோர்கள் பள்ளிக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவி அபர்ணா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டார். கொலையாளிகள் வீட்டில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த துணிகர கொலை சம்பவம் நடந்து இரண்டு மாதமாகியும் இதில் தொடர்புடைய கொலையாளிகளை போலீஸார் அடையாளம் காணவில்லை. மாறாக இக்கொலையை திசைதிருப்பி மூடிமறைப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, மாணவி அபர்ணா கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்றம் செய்து நடவடிக்கையை துரிதப்படுத்தவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X