'முத்துபுதூர் பள்ளியை மூடக்கூடாது' : கமிஷனரிடம் பெற்றோர்கள் குமுறல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2019
01:32

திருப்பூர்:முத்துபுதுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி விரைவில் இடிக்கப்பட உள்ளதால், மாணவர்களை மாற்று பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக, பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாநகராட்சி சார்பில் நேற்று நடந்தது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் ஒட்டியுள்ள முத்துபுதுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரை, 180 மாணவர்கள் படித்து வருகின்றனர்.


தற்போது, இப்பள்ளியை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் இடித்து, நவீன பார்க்கிங் கட்டமைப்பு வசதி கொண்டு வர மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மாநகராட்சி தரப்பில் துவங்கிவிட்டன. இருப்பினும், அப்பகுதி மக்களும், பெற்றோர்களும் பள்ளியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டம், பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் தலைமையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தா, வட்டார கல்வி அலுவலர் ராமசந்திரன் உட்பட, 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்றனர்.கமிஷனர் பேசுகையில், 'மாநகராட்சி வழங்கிய இடத்தில்தான் இப்பள்ளி செயல்படுகிறது. இந்த இடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு எடுக்கிறோம். நகர விரிவாக்கத்திற்கு இவ்விடம் தேவைப்படுகிறது. இதன்மூலம் திருப்பூரின் தரம் பன்மடங்கு உயரும். எனவே, பெற்றோர்கள் மாநகராட்சியின் புதிய திட்டத்திற்கு துணை நிற்க வேண்டும். தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கலாம். இதனால் குழந்தைகளின் கல்வித்தரம் எந்த வகையிலும் பாதிக்காது,' என்றார்.பெற்றோர் சிலர் கூறியதாவது:குடும்பம் நடத்தவே போதிய வருவாய் இல்லாத நிலையில்தான் இப்பள்ளியில் குழந்தைகளை படிக்க வைக்கிறோம்.


இதை விட்டால், அரண்மனைபுதுார், பழைய நகர் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும். வாகன போக்கு வரத்து நிறைந்த நெடுஞ்சாலையை கடந்து குழந்தைகள் செல்ல வேண்டும். பள்ளியை மூடுவதற்கு பதில் மாற்று வழியை கண்டுபிடிக்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.சி.இ.ஓ., சாந்தா கூறுகையில், ''பள்ளியை மூடுவதன் அவசியத்தை மாநகராட்சி தரப்பில் எடுத்துக்கூறி, பெற்றோர் தரப்பில் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி நிர்வாகமே உரிய தீர்வு காண வேண்டும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X